மேட்டு சுமித்து (நடிகர்)
மாத்யு இராபர்ட்டு சுமித்து (ஆங்கிலம்: Matthew Robert Smith) (பிறப்பு: 28 அக்டோபர் 1982) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் பிபிசி தொடரான டாக்டர் கூ[1] மற்றும் நெற்ஃபிளிக்சு தொடரான தி கிரௌன் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானவர், பின்னர் பிரதானநேர எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். சுமித்து ஆரம்பத்தில் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருக்க விரும்பினார், ஆனால் முதுகு தண்டுவட உபாதையினால் விளையாடுத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் ஆரம்பத்தில் இலண்டனிலுள்ள நாடக அரங்குகளில் மர்டரு இன் தி கதிட்ரலு, பிரெசு கில்ல்சு, தி ஹிசுடரி பாய்சு மற்றும் ஆன் தி சோர் ஆப் தி வைடு வோர்ல்டு முதலிய நாடகங்களில் நடித்தபின் நடிகரானார். அதை தொடர்ந்து பெர்ட் அண்ட் டிக்கி (2012), டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்[2] (2015), மோர்பியசு[3] (2022) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பகால வாழ்க்கைமாத்யு இராபர்ட்டு சுமித்து அக்டோபர் 28, 1982[4] இல் நார்தாம்டன்சயர், இங்கிலாந்தில் இடேவிட் மற்றும் இலைன் சுமித்து ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[5] இவருக்கு லாரா ஜெய்னி என்ற ஒரு சகோதரியும் உண்டு.[6] சுமித்து நார்தாம்டன் சுகூல் என்ற சிறுவர்ளுக்கான பள்ளியில் பயின்றார். இவரது தாத்தா கால் பந்து விளையாட்டில் கை தேர்ந்தவர். அவர் நாட்ட்சு கவுன்டி எப் சி என்ற குழுவுக்காக திறமையாக விளையாடினார்.[7] அதனால் சிறுவதில் இருந்து இவர் தனது தாத்தா போன்று ஓரு தொழில்முறை கால்பந்து வீரராக இருக்க விரும்பினார், ஆனால் முதுகு தண்டுவட உபாதையினால் விளையாடுத்துறையிலிருந்து வெளியேறினார். மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia