மேரி கிளப்வாலா ஜாதவ்மேரி கிளப்வாலா ஜாதவ் MBE (1909-1975) ஒரு இந்திய பொதுத் தொண்டு நிறுவனர் மற்றும் அறக்கொடையாளர் ஆவார். இவர் சென்னை மற்றும் இந்தியா முழுவதும் பெருமளவிலான அரசு சார்பற்ற அமைப்புகளை அவர் நிறுவியுள்ளார், மேலும் நாட்டில் பழைமை வாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட சமூக பணி அமைப்புகளை அமைப்பதில் பெருமளவில் ஈடுபட்டார். அவரது அமைப்பு கில்ட் ஆஃப் சர்வீஸ் , ஆதரவற்றோர் இல்லங்கள் , பெண் எழுத்தறிவு , ஊனமுற்றோரின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு டசன் பிரிவுகளுக்கு மேல் செயல்படுகிறது.[1] ஆரம்ப வாழ்க்கைமேரி 1909 சென்னை மாகாணத்தைச் சேர்ந்த உதகமண்டலத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ருஸ்டமின் படேல். தாயார் அல்லமை ஆவர். இவர்களது குடும்பம் சென்னை நகரில் 300 வலுவான உறுப்பினர்களைக் கொண்ட பார்சி சமூகத்தைச் சேர்ந்ததாகும்.[2] சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த மேரி தனது 18 ஆம் வயதில் நோகி கிளப்வாலாவை மணந்தார். இவர்களுக்கு 1930 இல் கஸ்ரோ என்ற ஒரு மகன் பிறந்தார். 1935 இல் நோக்கியா கிளப்வாலா ஒரு நோயால் இறந்தார். அதற்குப் பிறகு மேரி சமூக சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். பின்னர் இவரைப் போல சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த மேஜர் சந்திரகாந்த் கே ஜாதவ் என்ற இந்திய இராணுவ அதிகாரியை மணந்துகொண்டார்.[3] செயல்பாடுகள்1942 இல், இரண்டாம் உலகப் போரில், கில்ட் ஆஃப் சர்வீஸிலிருந்து பெறப்பட்ட பெரும்பாலான உதவியாளர்களைக் கொண்டு இந்திய மருத்துவக் குழுவை மேரி நிறுவினார். சென்னை நகரைச் சுற்றிலும் இந்தியத் துருப்புக்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் அவற்றுக்குப் போதுமான வசதிகள் இல்லை. மேரி அனைத்து சமூகப் பெண்களிடமிருந்தும் உதவியை நாடினார். நடமாடும் உணவகங்கள், மருத்துவச் சேவைகள், மடைமாற்றுதல் சிகிச்சை, மனமகிழ் நிகழ்வுகள் ஆகியவற்றை அப்பெண்களின் ஒத்துழைப்புடன் செயலாக்கினார். இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் புனர்வாழ்வளிப்பதற்காக மேற்கொண்ட இவரது முயற்சிகள் யுத்தத்திற்குப் பின்னரும் தொடர்ந்தன. இதனால் பொதுமக்கள் இவரது சேவைகளைக் கண்டு இவரின் இந்திய மருத்துவக் குழுவிற்கு நன்கொடைகளை ஏராளமாக அளித்தனர். வெற்றிகரமான 14 வது இராணுவம், மேரியின் மகத்தான சேவையைப் பாராட்டி ஒரு ஜப்பானிய வாளைப் பரிசாகத் தந்தது. மேரி கிளப்வாலா ஜெனரல் கரியப்பாவால் "டார்லிங்க் ஆஃப் த ஆர்மி" என்று அழைக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டில், சென்னை மாகாணத்தில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் என்ற பெயரில் சமுதாயப் பணிக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். இப்பள்ளி தென் இந்தியாவின் முதல் சமூக சேவைக்கான பள்ளி மற்றும் இந்தியாவின் இரண்டாவது (டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் - மும்பை) பள்ளியும் ஆகும். 1956 ஆம் ஆண்டில் திரு. கே.ஸ்டெல் என்பவருக்குப் பிறகு சென்னையின் நாட்டாண்மையாளராக ஒரு வருடத்திற்கு நியமிக்கப்பட்டார்.[4] 1961 ஆம் ஆண்டு டியூக் ஆஃப் எடின்பர்க் சென்னைக்கு (இப்போது சென்னை ) வருகை புரிந்த பொழுது திருமதி கிளப்வாலா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[5] விருதுகளும் பரிசுகளும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia