மேற்கு கலிமந்தான்
மேற்கு கலிமந்தான் (ஆங்கிலம்: West Kalimantan; மலாய்: Kalimantan Barat; இந்தோனேசியம்: Provinsi Kalimantan Barat; சீனம்: 西加里曼丹省; ஜாவி: كليمنتن بارت) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஓர் மாநிலமாகும். இதன் தலைநகரம் பொந்தியானாக் ஆகும். 147,307 கி.மீ.² பரப்பளவுள்ள இந்த மாநிலத்தின் மக்கள்தொகை 2020 கணக்கெடுப்பின்படி 5,414,390 ஆகும்.[2] இங்கு வாழும் இனக் குழுக்களில் தயாக், மலாய், இந்தோனேசியச் சீனர்கள், சாவக மக்கள், பூகிஸ், மதுரா இனத்தவர் அடங்குவர். சனவரி 2014 ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,546,439. பொதுமேற்கு கலிமந்தானின் எல்லைகள் கப்புயாசு ஆற்றுப் (Kapuas River) படுகையைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களை ஒட்டி அமைந்துள்ளன. இந்த மாநிலம் தென்கிழக்கில் மத்திய கலிமந்தான்; கிழக்கில் கிழக்கு கலிமந்தான்; ஆகிய இந்தோனேசிய மாநிலங்களுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அத்துடன் வடக்கில் மலேசியாவின் சரவாக் மாநிலத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேற்கு கலிமந்தான் மாநிலம் "ஆயிரம் நதிகளின் மாநிலம்" (The Province of a Thousand Rivers) என்று அழைக்கப்படும் ஒரு மாநிலமாகும். இந்த மாநிலம் நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் சிறிய ஆறுகளைக் கொண்ட புவியியல் அமைப்புகளைக் கொண்டுள்ளது. கரிமாட்டா நீரிணைஇந்த மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைக் கட்டமைப்புகள் நன்றாக இருந்த போதிலும், பல முக்கிய ஆறுகள் உள்நாட்டின் சரக்கு போக்குவரத்துக்கான முக்கியத் தடங்களாக இன்றும் உள்ளன. இங்குள்ள மக்கள் ஆறுகளைத் தங்களின் அன்றாடப் போக்குவரத்திற்காகப் பயன்படுவத்துவதையே இன்றும் விரும்புகின்றனர். மேற்கு கலிமந்தான் பகுதியின் ஒரு சிறிய பகுதி கடல் நீரால் சூழப்பட்டு இருந்தாலும், அங்கு பல சிறிய பெரிய தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. கரிமாட்டா நீரிணை மற்றும் ரியாவ் தீவுகளின் மாநிலத்தின் எல்லையாக உள்ள நதுனா கடல் வரையில் அந்தத் தீவுகள் பரவியுள்ளன. வரலாறுமேற்கு கலிமந்தானின் வரலாறு 17-ஆவது நூற்றாண்டில் தொடங்குகின்றது. 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாக இந்த மாநிலத்தில் டயாக், இனமக்கள் மட்டுமே வசித்து வந்தனர். இங்கு குடியேறிய மலாய் மக்கள் தங்கள் சுல்தானகங்களை நிறுவத் தொடங்கினர். இருப்பினும் அங்கு இருந்த உள்ளக மலாய் சுல்தானகங்களை முறியடித்து சீனச் சுரங்கப் பணியாளர்கள் இலாபாங் (ஆங்கிலம்: Lanfang Republic; சீனம்: 蘭芳共和國; இந்தோனேசியம்: Republik Lanfang) எனும் குடியரசை நிறுவினர். சீனர்களின் மக்கள் தொகை கூடியது. மேற்கு கலிமந்தானில் இந்தச் சீனக் குடியரசை டச்சுக்காரர்கள் 1884-இல் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினர். பொந்தியானாக் நிகழ்வுகள்மேற்கு கலிமந்தானை 1942 முதல் 1945 வரை ஜப்பானியர்கள் கைப்பற்றியிருந்தனர். இவர்களிடம் இருந்து 1945-இல் இந்தோனேசியா விடுதலை அறிவித்தது. ஜப்பானியர் கையகப்படுத்திய காலத்தில் 21,000-க்கும் மேற்பட்ட பொந்தியானாக் மக்கள் (சுல்தான்கள், ஆடவர், பெண்கள், சிறுவர்கள் உட்பட) சப்பானியத் துருப்புக்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, இனப்படுகொலை செய்யப் பட்டனர். இந்த நிகழவு பொந்தியானாக் நிகழ்வுகள் (Pontianak Incidents) என அறியப் படுகின்றது. கலிமந்தானின் அனைத்து சுல்தான்களும் கொல்லப் பட்டனர்; மலாய் உயர்க்குடியினர் சூறையாடப் பட்டனர். இரகசியக் கல்லறைகள்இந்த இனப்படுகொலை ஏப்ரல் 23, 1943 முதல் சூன் 28, 1944 வரை நடைபெற்றது. கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானோர் பொந்தியானாக்கில் இருந்து 88 கி.மீ. தொலைவிலுள்ள மண்டோர் (Mandor) என்னுமிடத்தில் பல பெரிய கிணறுகளில் புதைக்கப் பட்டனர். போருக்குப் பின்னர் இங்கிருந்த நேச அணி படைவீரர்கள் பல்லாயிரக்கணக்கான எலும்புகளைக் கண்டெடுத்தனர்; இந்த இனப்படுகொலை நடந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பல இரகசியக் கல்லறைகள் கண்டறியப்பட்டன. போருக்குப் பின்னர் சப்பானியப் படைத் தலைவர்களை நேச அணி கைது செய்து பன்னாட்டு படைத்துறை நீதிமன்றத்தில் நிறுத்தியது. இந்த விசாரணைகளின் போது கொலையுண்டவர்கள் சப்பானியருக்கு எதிராக எந்த புரட்சியும் திட்டமிடவில்லை என்பதும் பணி உயர்விற்காக பொந்தியாயானக்கில் இருந்த சப்பானியத் தலைவர்களின் கற்பனையில் உதித்த திட்டம் என்பதும் தெரிய வந்தது. மண்டோர் நினைவுச் சின்னம்இந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுறுத்தும் வண்ணம் மக்காம் ஜுவாங் மண்டோர் (Makam Juang Mandor) என்ற நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது.
1960களின் மத்தியில் சுகர்ணோ தலைமையில் இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் நடந்த சண்டையின் பெரும்பகுதி மேற்கு கலிமந்தானில் நடந்தது. 1965இல் சுகர்ணோவிடமிருந்து சுகார்த்தோ பதவியைப் பறித்துக் கொண்டபோது இந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. இருப்பினும் சுகார்த்தோவின் படைத்துறையினருக்கும் தடை செய்யப்பட்ட இந்தோனேசிய பொதுவுடமைக் கட்சி ஆதரவளித்த முன்னாள் போராளிகளுக்கும் இடையே உள்ளூர் சண்டை அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. டச்சு குடியேற்றம்1930-ஆம் ஆண்டுகளில் டச்சு குடியேற்றவாதிகள் குடிப்பெயர்விற்கான திட்டமொன்றை தொடக்கினர்; இதன்படி சாவகம் போன்ற மக்கள் அடர்த்தி மிக்க தீவுகளிலிருந்து மக்கள் அடர்த்தி குறைந்திருந்த கலிமந்தான், இரியான் ஜெயா (Irian Jaya) போன்ற தீவுகளுக்கு இடம் பெயரச் செய்தனர். 1960-களில் இந்தோனேசிய அரசு செம்பனை எண்ணெய் வேளாண்மைக்காக மதுரா இனத்தினர் (Madurese) காடுகளை அழிக்க அனுமதி வழங்கினர். இதற்கு உள்ளூர் தயாக் (Dayak) பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்; அவர்களின் மரபார்ந்த காட்டு வாழ்க்கைக்கு காடு அழிப்பு ஒரு புறம்பான செயலாக இருந்தது.[5] இதனால் இவ்விரு இனங்களுக்கும் இடையே வன்முறைச் சண்டைகள் இருந்து வந்தன; 1996; 1999-ஆம் ஆண்டுகளில் சம்பாசு கலகம் (Sambas Riots), 2001-இல் சம்பிட் கலகம் (Sampit Conflict) என தொடர்ந்த வன்முறையில் பல்லாயிரக் கணக்கானவர் உயிரிழந்தனர்.[6] காட்சியகம்
மேற்சான்றுகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia