மேற்கு வங்க மகளிர் ஆணையம் என்பது மேற்கு வங்காள அரசாங்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கட்டுப்பாட்டு வாரியங்களில் ஒன்றாகும். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலன் மேம்பாட்டின் நிர்வாகத்தின் கீழ் பெண்கள் மேம்பாட்டிற்கு முக்கியமாக பொறுப்பு வகிக்கும் ஒரு மகளிர் ஆணையமாகும். [3]
வரலாறு
மேற்கு வங்க மகளிர் ஆணையம் மேற்கு வங்க அரசால் 29 ஜூலை 1992 அன்றுஇந்தியப் பொதுவுடமைக் கட்சி(மா)) அரசாங்கத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்தால்[4] தீர்மானம் நிறைவேற்றி நிறுவப்பட்ட சட்டரீதியான தன்னாட்சி அமைப்பாகும். மேற்கு வங்க மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே நிறுவப்பட்ட, இந்த ஆணையம் பிப்ரவரி 3, 1993 முதல் செயல்படத் தொடங்கி அம்மாநில பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்கிறது.
அமைப்பியல்
மேற்கு வங்காள மகளிர் ஆணையம், ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர் மற்றும் ஒன்பது உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. அம்மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்கான வழிமுறைகளை மாநிலத்தின் சமூக நலத்துறை உருவாக்குகிறது. அவர்களின் சம்பளம் மற்றும் இதர ஊதியங்கள் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்டு, அவ்வப்போது திருத்தப்பட்டு வருகின்றன.
தலைவர்கள்
- பெலா தத்தா குப்தா : 01.02.1993-20.09.2001
- ஜசோதரா பாக்சி : 21.10.2001-20.04.2008
- மாலினி பட்டாச்சார்யா : 20.04.2008-20.05.2011
- சுனந்தா முகர்ஜி : 17.06.2011-16.06-2017
- லீனா கங்கோபாத்யாய் : 18.07.2017-தற்போது வரை
செயல்பாடுகள்
மேற்கு வங்காள மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்டதிலிருந்து பின்வரும் செயல்பாடுகளில் முழுமையாக பங்கெடுத்து வருகிறது:
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடு மற்றும் பாதுகாப்பை ஆணையம் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- மாநிலத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறினால், அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
- மாநிலப் பெண்களுக்கு நீதி வழங்குவதில் தவறினால் எந்தச் சட்டத்திலும் திருத்தங்களைப் பரிந்துரை செய்தல்.
- பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தல்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் உரிமைகளை மீறுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாதது போன்ற புகார்களைக் கொண்ட பெண்கள் நேரடியாக மகளிர் ஆணையத்தை அணுகலாம்.
- மாநிலத்தில் வன்கொடுமைகள் மற்றும் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி.
- பெண்களின் வெகுஜனக் குழு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு வழக்குச் செலவுகளுக்கு நிதியளித்தல் மற்றும் அவர்கள் தொடர்பான அறிக்கைகளை அவ்வப்போது மாநில அரசுக்குச் செய்தல்.
- பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள எந்த வளாகம், சிறை அல்லது இதர ரிமாண்ட் ஹோம் அல்லது வேறு ஏதேனும் வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருதல்.
- ஏதேனும் குறிப்பிட்ட பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விசாரிக்கவும், ஆய்வு செய்யவும் மற்றும் விசாரிக்கவும்.
- கல்வி ஆராய்ச்சியைத் தொடங்குதல் அல்லது ஏதேனும் ஊக்குவிப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறியவும்.
- பெண்களின் உரிமைகள் அல்லது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை அல்லது அவர்கள் தொடர்பான எந்தவொரு கொள்கைகளுக்கும் இணங்காதது அல்லது பெண்கள் நலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிவாரணம் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய எந்தவொரு பிரச்சினையையும் தானாக முன்வந்து அல்லது ஏதேனும் புகார்களை விசாரிக்க.
தற்போதைய குழு
பெயர்
|
பதவி
|
திருமதி லீனா கங்கோபாத்யாய்
|
தலைவர்
|
மௌசம் நூர் செல்வி
|
துணைத் தலைவர்
|
ஸ்ரீ. NW பூட்டியா
|
உறுப்பினர் - செயலாளர்
|
திருமதி. அர்ச்சனா கோஷ் சர்க்கார்
|
உறுப்பினர்
|
திருமதி அர்பிதா கோஷ் சர்க்கார்
|
உறுப்பினர்
|
டாக்டர் உமா சரேன்
|
உறுப்பினர்
|
திருமதி சுனிதா சாஹா
|
உறுப்பினர்
|
திருமதி.ஜெயீதா சின்ஹா
|
உறுப்பினர்
|
பேராசிரியர் மரியா பெர்னாண்டஸ்
|
உறுப்பினர்
|
திருமதி அபராஜிதா அத்யா
|
உறுப்பினர்
|
ஸ்ரோவந்தி பந்தோபாத்யாய்
|
உறுப்பினர்
|
மருத்துவர் திருமதி டிபன்விதா ஹசாரி
|
உறுப்பினர்
|
மேற்கோள்கள்