மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு
மேலாண்மைப் பட்டதாரி நுழைவுத் தேர்வு அல்லது மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வு (Graduate Management Admission Test ( JEE-mat ) என்பது ஒரு கணினி தகவுறு சோதனை ஆகும். இது முதுகலை வணிக மேலாண்மை போன்ற வணிக மேலாண்மைப் பிரிவுகளில் சேர்க்கை பெறுவதற்காக பகுப்பாய்வு, எழுதுதல், அளவறி மதிப்பீடு மற்றும் ஆங்கிலத்தில் எழுதுதல், வாசிக்கும் திறன்களை மதிப்பிடுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.[4] இதற்கு குறிப்பிட்ட இலக்கண அறிவும் இயற்கணிதம், வடிவியல் மற்றும் எண்கணிதம் பற்றிய அறிவும் தேவை. மேலாண்மைப் பட்டதாரி சேர்க்கைக் குழுமத்தின் கூற்றுப்படி பகுப்பாய்தல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மதிப்பிடுகிறது, அதே நேரத்தில் தரவுகள் பற்றிய தேவையான அறிவு, தர்க்கம் மற்றும் , பகுத்தறிவு திறன் ஆகியன நிஜ உலக வணிகத்திற்கும் நிர்வாக வெற்றிக்கும் முக்கியமானது என்றும் நம்புகிறது. [5] இந்தத் தேர்வினை ஒரு வருடத்திற்கு ஐந்து முறை வரை எழுதலாம். ஆனால், எட்டு முறைக்கு மேல் எழுதக் கூடாது. ஒவ்வொரு முயற்சிக்கும் 16 நாட்கள் இடைவெளியில் இருக்க வேண்டும். [6] ஜிமேட் என்பது மேலாண்மைப் பட்டதாரி சேர்க்கைக் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையாகும். [7] உலகெங்கிலும் உள்ள சுமார் 2,300+ பட்டதாரி மேலாண்மைப் பள்ளிகளில் 7,000 க்கும் மேற்பட்ட திட்டங்கள் தங்கள் திட்டங்களுக்கான தேர்வு அளவுகோலின் ஒரு பகுதியாக ஜிமேட்-ஐ ஏற்றுக்கொள்கின்றன. [8] மேலாண்மைப் பள்ளிகள் முதுகலை வணிக மேலாண்மை, முதுகலை கணக்குப் பதிவியல், முதுகலை நிதியியல் திட்டங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான பட்டதாரி மேலாண்மைத் திட்டங்களின் சேர்க்கைக்கான ஒரு அளவுகோலாக இந்தத் தேர்வைப் பயன்படுத்துகின்றன. இது,இணையவழியில் உலகெங்கிலும் உள்ள 114 நாடுகளில் தரப்படுத்தப்பட்ட சோதனை மையங்களிலும் நிர்வகிக்கப்படுகிறது. [9] கப்லான் டெஸ்ட் ப்ரெப் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, வணிக பிரிவினைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு ஜிமேட் முதன்மைத் தேர்வாக உள்ளது. [10] 2012 முதல் 2021 வரை இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படுவீழ்ச்சியடைந்து வருகிறது [11] வரலாறு1953 ஆம் ஆண்டில், தற்போது மேலாண்மைப் பட்டதாரி சேர்க்கைக் குழுமம் (ஜிஎம்ஏசி) என்று அழைக்கப்படும் அமைப்பு ஒன்பது மேலண்மைப் பள்ளிகளின் சங்கமாகத் தொடங்கியது, இதன் இலக்கானது மேலாண்மைப் பள்ளிகள் தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க உதவும் தரப்படுத்தப்பட்ட தேர்வை உருவாக்குவதாகும்.இதன் முதல் ஆண்டில் சுமார் 2,000 முறை தேர்வு எழுதப்பட்டது. ஆனால், சமீபகால ஆண்டுகளில் 2,30,000 முறை எழுதப்பட்டது.[12] ஆரம்பத்தில் 54 பள்ளிகளின் சேர்க்கைகளில் பயன்படுத்தப்பட்டது, இப்போது உலகம் முழுவதும் உள்ள சுமார் 2,300 பட்டதாரி வணிகப் பள்ளிகளில் 7,000 க்கும் மேற்பட்ட திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. [12] சூன் 5, 2012இல், GMAC ஓர் ஒருங்கிணைந்த பகுத்தறிவுப் பகுதியைத் தேர்வில் அறிமுகப்படுத்தியது, இது பல ஆதாரங்களில் இருந்து பல வடிவங்களில் வழங்கப்பட்ட தகவல்களை மதிப்பிடும் தேர்வாளரின் திறனை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டது. [13] ஏப்ரல் 2020இல், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தேர்வு மையங்களில் தேர்வு எழுத இயலாமற் போனது.எனவே, இணைய வழியில் தேர்வு எழுதும் முறை அறிமுகமானது.[14] வடிவமைப்பு, நேரம்GMAT தேர்வு நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது: பகுப்பாய்வு, காரணம் அறிதல், வளரறித் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு. [15]
இவற்றையும் காண்கசான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia