மைக்கல் ஜார்டன்
1999இல் இரண்டாம் முறையாக விலகினார். 2000இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் அணியை சிறுபான்மை உரிமையாளராகவும் அணியின் தலைவராவும் என்.பி.ஏ. உலகத்துக்கு திரும்பினார். 2001இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் உறுப்பினராக விளையாட்டு வீரராக என்.பி.ஏ.க்கு திரும்பினார். 2003 வரை இந்த அணியில் விளையாடி கடைசி முறையாக விலகினார். என். பி. ஏ.-இல் சேர்வதற்கு முன் இவர் மூன்று ஆண்டுகளாக வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் படித்து அந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடியுள்ளார். விளையாட்டு வீரராக பணியாற்றுவதற்கு பிறகு 2006இல் ஷார்லட் பாப்கேட்ஸ் அணியின் ஒரு சிறிய பங்கு வாங்கி தற்போது அந்த அணியின் ஒரு சிறுபான்மை உரிமையாளர் ஆவார். |
Portal di Ensiklopedia Dunia