மைக்ரோசாப்ட் எக்செல்
மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் கணினிகளுக்காகவும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காகவும் விருத்தி செய்யப்பட்டது. இது அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஓர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் விரிதாள் மென்பொருளாகும். இதன் பிரதான வசதிகளாவன வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல். இதன் தொடர்ச்சியான சந்தைப் படுத்தும் முயற்சிகள் இன்றுவரை பிரபலான மைக்ரோசாப்ட் மென்பொருளாக விளங்கவைத்தது. 1993 இல் லோட்டஸ் சாப்ட்வேர் (இன்றைய ஐபிஎம் இன் ஓர் பகுதி) இன் லோட்டஸ் 1-2-3 மென்பொருளை மைக்ரோசாப்ட்டு ஆபிஸ் மென்பொருளோடு எக்செல் மென்பொருளைச் சேர்த்துச் சந்தைப் படுத்தி வெற்றிகொண்டனர். வரலாறுஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களில் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது டாஸ் இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும் செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். போர்லாண்ட் நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. 1998 எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2013. இதன் தற்போதைய போட்டியாளர்களாக கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ் மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. லினக்ஸ் இயங்குதளத்தில் ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. 1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ வைரஸ் பரவலிற்கும் காரணமாக அமைந்தது. மைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும். ஆரம்பித்தல்எக்செல் ஐ ஆரம்பிக்க Start -> Run -> Excel என்று தட்டச்சுச் செய்தால் ஆரம்பிக்கும். வசதிகள்
சூத்திரங்களை (functions) எழுதும் முறை
எக்செல் சூத்திரங்கள் பின்வரும் வகையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டுத் தீர்க்கப்படும்
எக்செல் 2010 இலிருந்து 64 சூத்திரங்களை ஒரே சமயத்தில் பின்னிப் பிணைந்து (nested) பாவிக்க இயலும். பழைய எக்செல் பதிப்புக்களில் 7 சூத்திரங்களையே ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து பாவிக்க இயலும். தமிழ், ஏனைய இந்திய மொழிகளின் ஆதரவுமைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் வரிசைப்படுத்தக் (அல்லது வகைபடுத்த - Sort) கூடியவையே. விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியீட்டை ரூபாய்க்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும். எனினும் நாணயக்குறியீடு தமிழ் ரூபாய் குறியீடான ௹ ஐ விடுத்து இந்திய ரூபாய் குறியீடான ₹ ஐயே எடுத்துக்கொள்ளும். குறிப்பு: தரவுகளை வரிசைப்படுத்துதலை (sorting) தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை மற்றும் பாமினி போன்ற எழுத்துருக்களில் செய்யவியலாது. CHAR() சூத்திரம் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை ஐ மாத்திரமே ஆதரிக்கும் ஒருங்குறியை அல்ல. [1] இதுபோன்றே CHAR() சூத்திரமும் ஆயினும் ஒருங்குறி பாவிக்கப்பட்டால் பிழைச்செய்திவராமல் 63 என்ற விடையையே தரும். எக்செல் இன் (Left, right, mid, len போன்ற) சூத்திரங்கள் தமிழில் சரிவர இயங்காது. ஏனெனில் தமிழில் அநேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்து தமிழ் எழுத்துருவைத் தோற்றுவிப்பதால் ஆகும்.
விசைப்பலகைக் குறுக்குவழிகள்
துல்லியத்தன்மைஎக்செல் இலக்கங்களை 15 பொருளுடைய (significant figures) இலக்கங்களாகவே செமித்துக்கொள்ளும். இதனால் 16 இலக்கமுள்ள கடனட்டை (credit card) இலக்கத்தை இலக்கமாக சேமிக்க இயலாது ஆயினும் சொற்தொடராகச்(text) சேமித்துக் கொள்ளலாம். சூத்திரங்களைக் கணித்தபின் கிடைக்கும் துல்லியத்தன்மை இதனைவிடக்குக் குறைவானதெனினும் பெரும்பாலான கணித்தல்களுக்கு எக்செல் போதுமானதாகும். எக்செல் சமன்பாடுகளின் விடையைப் பொதுவாக 11 பொருளுடைய இலக்கங்களாகக் எக்செலில் காட்சிப்படுத்தும். வார்ப்புருஎக்செல் பயனர்கள் உருவாக்கும் வார்புருக்கள் (templates) %AppData%\Microsoft\Templates இல் வழமையாக சேமிக்கப்படும். இதன் வழமையான சேமிப்பு இடத்தை மாற்றுவதானால் மைக்ரோசாப்ட் வேட் ஊடாகவே செய்யலாம். [2]. 64பிட் இயங்குதளக் கணினிகளில் 32 பிட் ஆபிஸ் நிறுவப்பட்டிருந்தால் வார்ப்புருக்கள் C:\Program Files (x86)\Microsoft Office\Templates\1033 சேமிக்கப்பட்டிருக்கும். இவறையும் பார்க்க
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia