மை டியர் மார்த்தாண்டன்
மை டியர் மார்த்தாண்டன் 1990 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பிரதாப் போத்தன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, நடிகை குஷ்பூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்சன்சு தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் கமிங் டூ அமெரிக்கா என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். சிறந்த நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். கதைச் சுருக்கம்மார்த்தாண்டன் அரண்மனையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் தனக்கு பிடித்தமான ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்வதற்காக சென்னை வருகிறார். அங்கு, நகரத்திற்கு புதிதாக வருபவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் "ஐடியா மணியை" (கவுண்டமணி) சந்திக்கிறார். மார்த்தாண்டனுக்கு பணத்தின் மதிப்பு தெரியாததால் "ஐடியா மணி" மார்த்தாண்டனிடம் உள்ள எல்லா பணத்தையும் ஏமாற்றி பெற்றுக் கொள்கிறார். இந்நிலையில் பேக்கரியில் ஒரு பெண்ணை (குஷ்பூ) சந்தித்து, அவள் மேல் காதல் கொள்கிறார். தான் காதலித்த பெண்ணை கை பிடித்தாரா, பணத்தின் மதிப்பினை அறிந்து கொண்டாரா என்பதே படத்தின் இறுதிக் காட்சியாகும். நடிகர்கள்
பாடல்கள்இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார்.[1]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia