மொகலா

மொகலா (Mohla), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட மொகலா-மன்பூர்-அம்பாகர்சௌக்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[1]இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு தென்மேற்கே 155.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,106 குடியிருப்புகள் கொண்ட மொகலா ஊராட்சியின் மக்கள் தொகை 4,952 ஆகும். அதில் 2,685 ஆண்கள் மற்றும் 2,267 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.88 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 844 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.81 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 576 மற்றும் 1,059 வீதம் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya