மோண்ட் முறை![]() மோண்ட் முறை (Mond process அல்லது carbonyl process) என்பது தூய்மையற்ற கலப்பு நிக்கல் கூட்டுப் பொருட்களிலிருந்து கார்பனோரொக்சைடை (CO) பயன்படுத்தி தூய நிக்கலைப் பிரி்க்கும் வேதியியல் செயல்முறையாகும். இம்முறையை லுட்விக் மோண்ட் என்பவர் 1890 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.[1] கார்பனோரொக்சைட்டு நிக்கலுடன் இயல்பாகவே வினைப்பட்டு நிக்கல் கார்பொனைல் ஆக வளிம நிலையில் கிடைக்கிறது. நிக்கலின் இந்த இயல்பே மொண்ட் முறையில் பயன்படுத்தப்படுகிறது. மோண்ட் முறையில் மூன்று படிமுறைகள் உள்ளன: 1. நிக்கல் ஒக்சைடு செயற்கை வளிமத்துடன் (syngas) 200 °செ வெப்பநிலையில் தாக்கமடைந்து ஒக்சிசனை வெளியேற்றி, தூய்மையற்ற நிக்கலைத் தருகிறது. இதனுடன் இரும்பு, கோபால்ட் போன்ற மாசுக்கள் கலந்துள்ளன.
2. இந்த தூய்மையற்ற நிக்கல் மேலதிக கார்பனோரொக்சைட்டுடன் 50–60 °C இல் தாக்கமடைந்து நிக்க கார்பனைல் கிடைக்கிறது. மாசுக்கள் திடப்பொருட்களாக வெளியேறுகின்றன.
3. மேலதிக கார்பனோரொக்சைட்டு மற்றும் நிக்கல் கார்பனைல் கலவை 220–250 °செ இற்கு வெப்பமாக்கப்படும் போது, நிக்கல் டெட்ராகார்பனைல் பிரிவடைந்து நிக்கலாகப் பெறப்படுகிறது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia