மோராபந்த் திரியம்பக் பிங்ளே
மோரோபந்த் பேஷ்வா என்றும் அழைக்கப்படும் மோரோபந்த் திரியம்பக் பிங்ளே (Moropant Trimbak Pingle ) (1620-1683) மராட்டியப் பேரரசின் பேஷ்வாவாக இருந்தார். சத்ரபதி சிவாஜியின் அஷ்டபிரதான் எனப்படும் எட்டு அமைச்சர்கள் கொண்ட சபையில் பணியாற்றினார்.[1] ஆரம்ப கால வாழ்க்கைஇவர் 1620 நிம்கான் என்ற இடத்தில் தேசஸ்தா பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் [2] . 1647 ஆம் ஆண்டில், மராட்டிய பேரரசை நிறுவுவதில் இவர் சிவாஜியுடன் சேர்ந்தார். பிஜப்பூரின் ஆதில் ஷாவின் படைகளுக்கு எதிராக சிவாஜியின் படைகளின் 1659இல் நடந்த வெற்றிகரமான பிரதாப்காட் போரில் பங்கேற்ற போர்வீரர்களில் இவரும் ஒருவர். இப்போரில் ஆதில் ஷாவின் படைத்தலைவர் அப்சல்கானின் மரணத்தில் முடிந்தது. முகலாயப் பேரரசிற்கு எதிரான திரியம்பகேசுவர் கோட்டை மற்றும் வனி- டிண்டோரி ஆகிய இடங்களில் நடந்த போர்களிலும் இவர் பங்கேற்றார். 1664 இல் சிவாஜியின் சூரத்து மீதான படையெடுப்பில் பங்கேற்றார். சிவாஜியின் மகன் சம்பாஜி ஆக்ராவிலிருந்து தப்பித்த பின்னர் மதுராவில் இவரது உறவினர்களுடன் தங்கினார். நிர்வாகம்மோராபந்த் சிவாஜியின் ஆட்சிக்கு நல்ல வருவாய் நிர்வாகத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பாதுகாப்பு மற்றும் முக்கியக் கோட்டைகளின் பராமரிப்பு தொடர்பான திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்தார். பிரதாப்காட் கோட்டை கட்டுமானத்திற்கும், அதன் நிர்வாகத்திற்கும் இவர் பொறுப்பேற்றார். சிவாஜி இறந்தபோது, இவர் நாசிக் மாவட்டத்திலுள்ள சல்கெர்-முல்கர் கோட்டைகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளின் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். சிவாஜியின் வாரிசான சம்பாஜியின் கீழ், 1681 இல் புர்ஹான்பூர் போரிலும் பங்கேற்றார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia