மோரியர்

மோரியர் ஆட்சிப் பரப்பு

மௌரியப் பேரரசு சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது.

கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப் பரப்பளவை 50லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான். கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது.

எங்கு எப்போது முறியடிக்கப்பட்டது எனபதைக் காட்டும் சான்று சங்கப்பாடலில் உள்ளது.

கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.[1]

வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.[2]

இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.[3][4]

இணைத்துப் பார்க்கவேண்டியது

ஆரியர் (சங்ககாலம்)

சான்று

  1. வெல்கொடி துனைகால் அன்னை, புனைதேர் கோசர், தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின், பகை தலைவந்த மாபெருந்தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.
  2. மயில் ஒழித்த பீலி வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கணை குரல் இசைக்கும் விரை செலல் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென்-திசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து, ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை இறந்து அவரோ சென்றனர் – அகநானூறு 281-8 மாமூலனார்
  3. வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைக்கழி அறைவாய் - புறம் 175-6 கள்ளில் ஆத்திரையனார்.
  4. விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர். (பொருள் தேடச் சென்ற தமிழர்) - அகம் 69-10 உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya