மௌரியர்கள்![]()
![]() மௌரியர்கள் (Moriya), இரும்புக் காலததில் பண்டைய இந்தியாவின் இந்தோ ஆரிய மக்களான மௌரிய இனக்குழுவினர் கிழக்குக் கங்ககைச் சமவெளியில், தற்கால வட இந்தியாவின் நேபாள நாட்டை ஒட்டிய கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளத்தின் தெராய் பகுதிகளில் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார். மௌரியர்களின் தலைநகரம் பிப்லிவனம் ஆகும். மௌரியர்கள் கண சங்கம் எனும் மக்கள் குடியரசு முறையில் ஆட்சி செய்தனர்.[1][2] மௌரியர்களின் தலைநகரம் பிப்லிவனம் ஆகும்.[1][2][3] மௌரியர்களின் குலக்குறிச் சின்னமான மயில் மூலம் இந்த இன மக்களுக்கு மௌரியர்கள் எனப்பெயராயிற்று.[1][2][3][4] எல்லைகள்மௌரியர்கள் வடகிழக்கு கோசலத்திற்கு அருகில் பாயும் கிழக்கு ரப்தி ஆற்றின் கரையில் வாழ்ந்தனர். மௌரியர்களின் கண சங்கத்திற்கு கிழக்கே கோலியர்கள் மற்றும் மேற்கே மல்லர்கள் வாழ்ந்தனர். காக்ரா ஆறு இதன் தென் எல்லையாக இருந்தது. .[1] பெயர்மகதப் பேரரசர் அஜாதசத்துரு கிழக்கு கங்கைச் சமவெளியின் கண சங்கங்களை ஆக்கிரமித்த பிறகான வட இந்தியாவின் வரைபடம் வரலாறுகௌதம புத்தர் இறந்த பிறகு அவரது உடலை, மல்லர்களின் தலைநகரான வைசாலி நகரத்தில் எரியூட்டி கிடைத்த சாம்பலில் ஒரு பகுதியை, குசிநகரத்தின் மல்லர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு.[2][3][5] புத்தர் உடல் சாம்பலின் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்ட மௌரியர்கள், தங்கள் நாட்டின் தலைநகரான பிப்லிவனம் நகரத்தில் தூபி அமைத்து, அதில் புத்தரின் சாம்பலை வைத்துப் போற்றினர்.[1][5] கிமு 468ல் அஜாதசத்துரு வஜ்ஜி மற்றும் மௌரிய கண இராச்சியங்களை ஆக்கிரமித்து மகதப் பேரரசுடன் இணைத்தார்.[1] மரபுரிமைமௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியர், மௌரிய இனக்குழுவின் முன்னோடி என மௌரியர்கள் கொண்டாடுகின்றனர்.[2][3]. கிமு 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகதப் பேரரசின் நந்த வம்ச பேரரசர் தன நந்தனை வென்று சந்திரகுப்த மௌரியர் மகதப் பேரரசர் ஆனார்.[6] அரசியல் மற்றும் சமூக அமைப்புசத்திரியர்களான மௌரியர்கள் மக்கள் குடியரசு முறையில் ஆட்சி செய்தனர்.[1] மேற்கோள்கள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia