யா. ஒத்தக்கடை
யா.ஒத்தக்கடை (Y-Othakkadai) அல்லது யானைமலை ஒத்தக்கடை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்திருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இங்கு நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் மற்றும் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது.இவ்வூரானது,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும்,மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,185 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஒத்தக்கடை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். ஒத்தக்கடை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். யானைமலைமதுரையின் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊரில் யானைமலை என்ற மலை உள்ளது. இந்த மலையின் மேலும் அடிவாரத்திலும் பழங்கால சமணர் குகைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். இங்குள்ள மக்களால் அது பஞ்ச பாண்டவர் படுக்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஒத்தக்கடையில் இருந்து ரோசா நிற கருங்கல் என்று அழைக்கப்படும் கல் வகை இந்த மலையில் இருந்து அதிகம் பெறப்படுகிறது. இந்த ரோசா நிற கருங்கல்லானது மதுரை மாவட்டத்திற்கே உரிய சிறப்பாகும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்ஒத்தக்கடையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. ஒத்தக்கடைக்கு அருகில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. கோயில்கள்
சமண சிற்பங்கள்கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது.
இதனையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia