யூகி மைக்கேல் அந்தொனியாடி![]() யூஜின் மைக்கேல் அந்தோனியாடி (Eugène Michel Antoniadi, மார்ச்சு 1, 1870 - பிப்ரவரி 10, 1944) ஒரு கிரேக்க வானியலாளர் ஆவார். ஆசியாமைனரில் (இன்றைய துருக்கியைச் சேர்ந்த இசுத்தான்புல்லில்) பிறந்தார். தனது வாழ்வின் பெரும்பகுதியை பிரான்சில் கழித்தார்.[1] இளமையிலேயே வானியலில் ஆர்வம்கொண்டு, 1893 இல் நிக்கோலசு ஃபிளம்மாரியனுடன் இணைந்து பணிபுரிய பாரீசுக்கருகில் இருந்த ஜூவீசுக்குச் சென்றார். பிறகு இவர் மியூடான் வான்காணகத்துக்குச் சென்று தனது ஆய்வைத் தொடர்ந்தார். 1928இல் ஃபிரெஞ்சுக் குடிமகன் ஆனார். தனது இருநூல்களான செவ்வாய்க் கோள் (லெ பிளானட்டே மார்சு-1930),[2] புதன் கோள் (லெ பிளானட்டே மெர்கியூர்-1934) ஆகியவற்றில் பல்லாண்டுக் காலப் பட்டறிவைப் பதிவாக்கியுள்ளார். அதில் அவ்விரு கோள்களின் நிலவரைகளையும் வெளியிட்டுள்ளார். இவர் 1934இல் வானியல் வரலாறு குறித்த நூலொன்றையும் எழுதியுள்ளார். மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia