யூக்கோ காக்காழுயூக்கோ காக்காழு (Yūko Kakazu)(嘉数悠子 காக்காழு யூக்கோ) ஒரு யப்பானிய வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி உருவாக்கத்திலும் படிமலர்ச்சியிலும் சிறப்பு தகைமை வாய்ந்தவர்.[1][2] இவர் NAOJ அவாய் வான்காணகச் சுபாரு தொலைநோக்கிக்கான மக்கள் பரப்புரை வல்லுனர் ஆவார்.[1][2][3][4][5] இளமையும் கல்வியும்இவர் யப்பான், ஒகினாவாவில் பிறந்து வளர்ந்தார்.[1][2] நாசா நல்கையில் இவர் பங்குபெற்ற விண்வெளி முகாம் விண்வெளி அறிவியலில் பணியாற்ற வழிவகுத்துள்ளது.[1][2] ஒகினாவா சோகாக்கு உயர்நிலைப்பள்ளியில் தன் கல்வியை முடித்ததும், இவர் தோகோக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத்தில் அறிவியற் பட்டப் பள்ளியில் படித்தார்.[3] அங்கு முதலில் இவர் வேதியியல் துறையில் சேர்ந்தாலும் பின்னர் இயற்பியல் துறைக்கு மாறியுள்ளார்.[3][6] அப்பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டம் பெற்றதும், இவர் மனோவாவில் உள்ள அவாய் பல்கலைக்கழகத்தில் முதுவர் பட்டமும் வானியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3] வாழ்வும் ஆய்வும்இவர் 2008 முதல் பாரீசு வானியற்பியல் நிறுவனத்தில் பல ஆய்வுநிலைகளில் பணிபுரிந்துள்ளார். பின்னர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வாளராக 2010 முதல் பணிபுரியலானார். பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2011 முதல் ஆய்வாளரானார்.[2][3] இவர் இப்போது ட்வத்யேசிய வானியல் அமைப்பின் வான்கானகத்திலும் சுபாரு தொலைநோக்கியிலும் 2013 முதல் ஆய்வாளராக பணிபுரிகிறார்.[2][3] இவரது ஆய்வுப் புலம், புடவியின் உறுப்புகளாக அமையும் பால்வெளிகளின் தோற்றமும் படிமலர்ச்சியும் ஆகும்.[4][7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia