யூக்ரிப்டைட்டு
யூக்ரிப்டைட்டு (Eucryptite) LiAlSiO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் யூக்ரிப்டைட்டு கனிமத்தை Ecp[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. இலித்தியம் தாங்கிய அலுமினிய சிலிக்கேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படும் இக்கனிமம் முக்கோண - சாய்சதுரப் பிழம்புரு படிக அமைப்பில் காணப்படுகிறது. பொதுவாக சிறுமணி முதல் பெரிய வடிவம் வரையில் போலி உருவவியல் ரீதியாக சுபோடுமீனைப் போல காணப்படுகிறது. எளிதில் நொறுங்கக் கூடியதாகவும் சங்குருவத்தில் தெளிவற்ற பிளவும் கொண்டுள்ளது. படிகத்தின் வழியாக ஒளிபுகும் மற்றும் ஒளி கசியும். நிறமற்றது முதல் வெள்ளை நிறமாகவும் பழுப்பு நிறமாகவிம் தோன்றும். 6.5 என்ற மோவின் கடினத்தன்மையையும் 2.67 என்ற ஒப்படர்த்தியும் கொண்டிருக்கும். ஒளியியல் ரீதியாக nω = 1.570 - 1.573 மற்றும் nε = 1.583 - 1.587 என்ற ஒளிவிலகல் குறியீட்டு எண் மதிப்புகளுடன் நேர்மறை ஒற்றை அச்சை கொண்டிருக்கும். பொதுவாக ஆல்பைட்டு, சுபோடுமீன், பெட்டலைட்டு, அம்ப்லிகோனைட்டு, லெபிடோலைட்டு மற்றும் குவார்ட்சு ஆகிய கனிமங்களுடன் இணைந்து இலித்தியம் நிறைந்த பெக்மாடைட்டு பாறைகளில் காணப்படுகிறது.[2] சுபோடுமீன் கனிமத்தின் இரண்டாம் நிலை மாற்ற விளைபொருளாகக் காணப்படுகிறது. முதன்முதலில் 1880 ஆம் ஆண்டு கனெக்டிகட்டின் பிராஞ்ச்வில்லே என்ற இடத்தில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது. ஆல்பைட்டு கனிமத்தில் பதிக்கப்பட்டு கிடைத்ததால், நன்கு மறைக்கப்பட்ட என்ற பொருளுக்கான கிரேக்க சொல்லில் இருந்து யூக்ரிப்டைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது.[1][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia