யூபோயா
யூபோயா (Euboea, yoo-BEE-ə -ə) அல்லது Evia, EH-vee-ə ; கிரேக்கம்: Εύβοια Evia ; பண்டைக் கிரேக்கம்: Εὔβοια Euboia) என்பது கிரேக்க தீவு ஆகும். இது கிரேக்கத்தின் கிரீட்டிற்கு அடுத்து பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் இரண்டாவது பெரிய தீவு ஆகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதியான போயோட்டியாவிலிருந்து குறுகிய யூரிபஸ் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது ( நீரிணையின் அகலம் ஒரு இடத்தில் 40 மீ (130 அடி) அகலம் மட்டுமே உள்ளது). பொதுவாக இத்தீவு நீண்டும் அகலத்தில் குறுகியும் உள்ளது. தீவானது சுமார் 180 கி.மீ. (110 மைல்) நீளம் கொண்டது. மேலும் 50 கி.மீ. (31 மைல்) முதல் 6 கி.மீ. (3.7 மைல்) வரை அகலத்தில் மாறுபடுகிறது. இது புவியியல் ரீதியாக வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை நீண்டு உள்ளது. மேலும் இதன் நீளம் முழுவதும் மலைத்தொடர் ஒன்று நீண்டு செல்கிறது. இது கிழக்கில் தெசலியை இணைக்கும் சங்கிலித் தொடரின் ஒரு பகுதியாகும், மேலும் ஆன்ட்ரோஸ், டினோஸ், மைகோனோஸ் ஆகிய உயரமான தீவுகள் யூபோயாவுக்கு தெற்கே தொடர்கின்றன. [1] இது யூபோயாவின் பெரும்பாலான பிராந்திய அலகுகளை கொண்டுள்ளது. இதில் ஸ்கைரோஸ் மற்றும் கிரேக்க நிலப்பகுதியின் ஒரு சிறிய பகுதியும் அடங்கும். குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia