யோக்கிம் பிராங்கு
யோக்கிம் பிராங்கு (Joachim Frank, ஜோக்கிம் பிராங்க், பிறப்பு: 12 செப்டம்பர் 1940) ஒரு ஜெர்மானிய அமெரிக்கர், கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் நகரம் வசிக்கும் உயிர் இயற்பியலாளர் மற்றும் உயிரியல் மூலக்கூறுகளுக்கான ஒற்றைத் துகள் தாழ்வெப்ப எலக்ட்ரான் நுண்ணோக்கி துறையை தோற்றுவித்தவர். இவர் 2017 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு ரிச்சர்டு ஹென்டர்சன் மற்றும் ஜாக்ஸ் துபோகேத் ஆகியோருடன் இணைந்துப் பெற்றார்.[2] பாக்டீரியா மற்றும் யூக்கரியோட்ஸ் ஆகியவற்றிலிருக்கும் ரைபோசோமின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை ஆராய்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார். வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிப் பணிபிரான்க் வெய்டெனா/சீகிலில் பிறந்தார். ஃப்ரைபர்க் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.[3] வால்டர் ரோல்வாகன் வழிகாட்டின்படி லுட்விக் மாக்ஸிமில்லியன்ஸ் முனிச் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சியான தங்கம் அதன் உருகும் புள்ளியில் துணை எலக்ட்ரான் உமிழ்வு பற்றிய கட்டுரைக்குப் 1967 ஆம் ஆண்டில் பட்டயம் பெற்றார். பிரான்க் தனது முனைவர் பட்டத்தை முனிச் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் உள்ள வால்டர் ஹோப்ஸ் மேக்ஸ் பிளான்க் ஆராய்ச்சிக் கூடத்தில் (தற்போது மேக்ஸ் பிளான்க் உயிர் வேதியல் நிறுவனம்) பட வேறுபாடு மற்றும் புனரமைப்பு முறைகளைப் பயன்படுத்தி அதிக துள்ளிய எலக்ட்ரான் நுண்ணோக்கி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக 1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். விருதுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia