ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டே (ஆங்கிலம்: Rangaraj Pandey), இந்தியாவிலுள்ள ஓர் ஊடகவியலாளர், நடிகர் ஆவார். தினமலர், தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணிபுரிந்தவர். தற்பொழுது சாணக்கியா எனும் யூடியூப் வலைத்தள செய்தி அலைவரிசையினை நடத்திவருகின்றார். இளமை & கல்விபாண்டே தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரில் வட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ரகுநாதாச்சாரியர்.[1]. இவரது பெற்றோர் பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்வழி அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் பாண்டே தனது குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். 1999ல் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்தார். தொலைக்காட்சித் துறையில்தந்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாண்டே, பல்துறை குறித்து, பல்துறை அறிஞர்களுடன் விவாதம் செய்யும் ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச்சியும், பல்துறை ஆளுமைகளை நேர்காணல் கண்டு அவர்களின் செயல்பாடுகளில் உள்ள உண்மைத் தன்மைகள் குறித்து, பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் கேள்விக்கென்ன பதில் எனும் நிகழ்ச்சியும், மக்கள் முன்னிலையில் இரு அணிகளுடன் விவாதிக்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சியும் இவரின் குறிப்பிடத்தக்க பணியாகும்.[2] இவர் டிவி நிகழ்ச்சியோடு மட்டுமல்லாமல் கல்வி நிலையங்கள் மற்றும் பொது மேடைகளில் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.[3] 2012 முதல் 2018 டிசம்பர் வரை தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[4] தற்போது சாணக்யா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.[5] திரைப்படம்
சாணக்யாஇவர் தற்போது யூடியூப்பில் சாணக்யா என்ற தனிப்பட்ட வலைப்பதிவு சேனலை நடத்துகிறார்.[8] விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia