ரஞ்சன்பென் தனஞ்சய் பட்ரஞ்சன்பென் தனஞ்சய் பட் (Ranjanben Dhananjay Bhatt)(பிறப்பு 10 ஆகஸ்ட் 1962) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்.அவர் 16 மற்றும் 17 வது மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார் தொழில்பட் வதோதராவின் துணை மேயராக இருந்தார்.[1][2]கடந்த 22 ஆண்டுகளாக "மகளிர் மன்றத்தை" இயக்கி தலைமை தாங்கிய பெருமைக்குரியவர்.[3] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வதோதரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 16 ஆம் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 16 வது மக்களவையில், பட் நீர்வள அமைச்சகத்தின் கீழான நதி மேம்பாடு மற்றும் கங்கா புத்துணர்ச்சி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[3] 2014 முதல் 2016 வரை, இவர் உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துக்கான நிலைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார் . [3][4] 2016 முதல் 2019 வரை, அவர் தொழில்துறை நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பட் மீண்டும் வதோதரா தொகுதியிலிருந்து 17 ஆம் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை இவர் இரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[3] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia