ரம்பையின் காதல் (1956 திரைப்படம்)
ரம்பையின் காதல் என்பது 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் புராணத் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. பானுமதி, கே. ஏ. தங்கவேலு, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் இதே பெயரில் 1939 இல் வெளியான திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[2] இது 28 செப்டம்பர் 1956 அன்று வெளியானது.[3] கதைபூமியின் அழகைக் காண தோழிகளுடன் ரம்பை (பானுமதி) வருகிறாள். வந்த இடத்தில் காணப்பட்ட அழகான காட்சிகளைக் கண்டு கூடுதலான நேரம் அங்கேயே தங்கி விடுகிறாள். இந்திரனின் அவைக்கு நடனமாட குறித்த நேரத்தில் வராதத ரம்பை மீது இந்திரன் கோபம் கொள்கிறான். அவள் தாமதமாக வந்ததற்கான காரணத்தை அறிகிறான் இந்திரன். அதனால் கோபமுற்ற இந்திரன் பூமியிலேயே சிலையாக நிற்கக்கடவாய் என சபிக்கிறான். நாரதரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரம்பையின் சாபத்தைக் குறைக்கிறான். அதாவது பகலில் சிலையாக இருக்கும் ரம்பை இரவில் தன் சுய உருவத்தைப் பெறலாம் என்பதே அது. அந்த ஊரில் எல்லோராலும் கேளிக்கு உள்ளாக்கப்படும் முத்தழகுவின் (தங்கவேலு) கண்களைக் கட்டி, அந்தச் சிலையை மணமகள் என்று கூறி போலி சடங்கு நடத்தி அவனுக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். சிலையாக இருக்கும் ரம்பை முத்தழகுவை கணவனாக ஏற்றுக் காதலிக்கத் தொடங்குகிறாள். கணவனை பூமியில் இருந்து தேவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறாள். பிறகு என்ன நேர்கிறது என்பதே கதை. நடிப்பு
இசைஇப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி ஆகியோர் எழுதினர்.[4] பாடல்களுள் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'சமரசம் உலாவும் இடமே' என்ற பாடல், சமத்துவம் நிலவும் இடம் மயானம் மட்டுமே என்ற மெய்யியல் கருத்தால் வற்றாத புகழ் பெற்றது.
வரவேற்புதி இந்தியன் எக்ஸ்பிரசு எழுதிய விமர்சனத்தில், "பானுமதி, ஒரு நடிகையாக, ரம்பையின் பாத்திரத்தை குறிப்பிடத்தக்க வகையில் நிரப்புகிறார். வளர்ந்து வரும் நட்சத்திரமான முத்துலட்சுமி நம்பிக்கையை அளிக்கிறார். ஆனால் நம்பியார் நாரதரை கேலி செய்கிறார்".[5] கல்கியின் காந்தன் இயக்கம், எழுத்து, இசையைப் பாராட்டினார்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia