ராஜாமகள் (2023 திரைப்படம்)
ராஜாமகள் (Raja magal) 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். ஹென்றி. ஐ இயக்கத்தில் ஆடுகளம் முருகதாஸ், வெலினா, பேபி பிரதிக்சா, பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர் . இத்திரைப்படம் 2023 மார்ச்சு 17 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்த நடிகர் ஆடுகளம் முருகதாசுக்கு இப்படம் முதல் முக்கியக் கதாபாத்திரமாக அமைந்தது.[1] அகிலன் (2012) திரைப்படத்திற்குப் பின்னர், ஹென்றி இரண்டாவதாக இப்படத்தை இயக்கியிருந்தார்.[2] வரவேற்புஇப்படம் தமிழ்நாடு முழுவதும் 2023 மார்ச்சு 17 அன்று வெளியிடப்பட்டது. தி ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஒரு விமர்சகர் , குழந்தை நடிகையின் நடிப்பைப் பாராட்டி திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[3] தினத்தந்தி யில் இருந்து ஒரு விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்து, படத்தில் பல காட்சிகள் "தொடர் போல்" இருப்பதாகக் குறிப்பிட்டார்.[4] தினபூமி மற்றும் வீரகேசரியின் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வழங்கப்பட்டன.[5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia