ராஜீவ் பிரதாப் ரூடிராஜீவ் பிரதாப் ரூடி பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1962-ஆம் ஆண்டின் மார்ச்சு முப்பதாம் நாளில் பட்னாவில் பிறந்தார்.[1] இவர் சாரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார். ஆரம்பக்கால வாழ்க்கைராஜீவ் பிரதாப் ரூடி, விஸ்வநாத் சிங் மற்றும் பிரபா சிங் ஆகியோருக்கு மகனாக மார்ச் 30, 1962 அன்று பீகார் பாட்னாவில் பிறந்தார்.[2][3] இவரது மூதாதையர் கிராமம் அம்னூர். பீகார் மாநிலத்தில் சரணில் உள்ளது.[4][5] [6] ரூடி தனது பள்ளி கல்வியை பாட்னாவின் செயின்ட் மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.[7] பின்னர், பிரிவு 10இல் சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் தனது பல்கலைக்கழக முன்படிப்பினையும் பொறியியலில் பட்டப் படிப்பினையும் முடித்தார். ரூடி சென்டிகர், சண்டிகரில் உள்ள அரசு கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ (ஹான்ஸ்) பட்டப்படிப்பை முடித்தார். ரூடி பஞ்சாபிலிருந்து சட்டத்தில் பட்டம் பெற்றார். 1985இல் பல்கலைக்கழகம் மற்றும் 1987இல் மகத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அரசியல் வாழ்வுகல்லூரி காலத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்ட இவர் பீகார் மாநிலம் தரையா சட்டப் பேரவை தொகுதியில் ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பிராக ஆனார். இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் விமான போக்குவரத்து இணை அமைச்சராக இருந்தார். இவர் வணிகரீதியிலான வானூர்திகளை உரிமம் பெற்று ஓட்டிய முதல் இந்திய மக்களவை உறுப்பினர் இவர் ஆவார்.[8] பதவிகள்
தனிப்பட்ட வாழ்க்கைரூடி 9 மார்ச் 1991இல் 29 வயதில் நீலம் பிரதாப்பை மணந்தார்.[9][10] இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[11] மூத்த மகள் அவ்ஷ்ரேயா ரூடி (பிறப்பு 1993) வழக்கறிஞர் மற்றும் ஒரு போலோ வீரர் ஆவார்.[12] இவரது இளைய மகள் அதிஷா பிரதாப் சிங் (பிறப்பு 2000). அதிஷா குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார்.[13][14][15][16] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia