ராஜ முக்தி
ராஜமுக்தி (Raja Mukthi) 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புதுமைப்பித்தன் எழுத, ராஜ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2] கதைச் சுருக்கம்வைஜயந்தி மன்னன் ராஜேந்திர வர்மன், தன் வமச விரோதியான மகேந்திர வர்மனோடு ஆறு வருடமாக தொடர்ந்து போரிடுகிறான். அவன் மனைவி மிருணாளினி கணவன் வெற்றியுடன் சீக்கிரம் திரும்ப வேண்டுமென்று திருமாலை துதிக்கிறாள். மந்திரியும் ராஜகுருவும் மன்னன் வராமலிருக்க போர் நீடிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். ஆனால் வேந்தன் வெற்றியுடன் சேனாபதி அமரசிம்மனோடு நாட்டிற்கு வருகிறான், வரவேற்பின் போது மந்திரியின் தங்கை கன்னிகா சேனாபதியிடம் உள்ளத்தை பறிகொடுக்கிறாள். தனிமையில் காதல் பிக்ஷை கேட்டு மறுக்கப்படுகிறாள். இதை அறிந்த மந்திரி தங்கையின் அசட்டுத்தனத்தை இடித்துக் காட்டி, மன்னனை மயக்கி ஓர் மைந்தனை பெற்று விட்டால் "மகுடம் உனக்கு, மகாராணி நீ" என்று தூபமிடுகிறான். கன்னிகா உள்ளம் கலைந்து தன் காதலை மன்னர் பக்கம் திருப்புகிறாள். சந்தர்ப்பம் வாய்க்கிறது. ஒரு நாள் இரவு உப்பரிகையில் வேந்தன் தனியே இருப்பதை அறிந்து, கனி வர்க்கங்களை எடுத்துக்கொண்டு கன்னிகா அங்கு செல்ல இருவருக்கும் உரையாடல் நடக்கிறது. அவளுடைய சிற்றின்பம் பற்றிய கேள்விகளுக்கு, வேந்தன் பேரின்பப் பொருளில் விடை கொடுத்தவாறே பழத்தை புசித்து தோலை வெளியே எறிகிறார். எதிர்பாராமல் அங்கு வந்த ஒரு முதியவர், அறியப்பட்ட தோல்களை எடுத்துத் தின்று பசியாறுகிறார். அந்தப்புரத்தருகில் அன்னியனைக் கண்ட, ரஜனி என்ற பணிப் பெண், கூச்சலிடவே காவலர்களால் முதியவர் பிடிபட்டு, கசையால் அடிபடுகிறார். அவர்கள் அடிக்க அடிக்க அவர் சிரிக்கிறார். சிரிப்பின் எதிரொலி அரண்மனையை சலக்குகிறது. அடியோசை கேட்ட அரசன் திடுக்கிட்டு வந்து பார்க்க, சாதுவென்றறிந்து அடிப்பதை தடுத்து, அடுத்த நாள் தர்பாருக்கு அழைத்து வரும்படி ஆக்ஞையிடுகிறான். இந்த சம்பவத்தால் இரவில் மன அமைதியின்றி அரசன் தனித்திருக்கும்போது, கன்னிகா, பிரவேசித்து காமவலை வீசுகிறாள். மிருணாளினியின் எதிர்பாராத வருகையால் அரசர், அவள் வலையில் சிக்காமல் தப்புகிறார். மறுநாள் விசாரணையில், சாதுவின் ஞான மொழிகளால், மன்னன், மனம் மாறி, பொக்கிஷத்திலுள்ள பொருளை யெல்லாம் தானதர்மம் செய்து, கர்ப்பம் தரித்திருக்கும் தன் மனைவியையும் பிரிந்து, பண்டரிபுரம் சென்று, பாண்டுரங்கன் அருள் பெற்று துறவியாகி ஊரூராய் சுற்றி உபதேசம் செய்து வருகிறார். அரண்மனையில், மந்திரியின் மண்ணாசை, ராஜகுருவின் பெண்ணாசை, கன்னிகாவின் காமச்சேட்டை, யாவும் வெளியாகவே, மூவரையும் உடனே வெளியேறும்படி சேனாபதி கர்ஜிக்கிறான். ராஜகுரு தந்திரத்தால் தப்புகிறான். அண்ணனும் தங்கையும் அப்போதே புறப்பட்டு, பகையரசன் மகேந்திரனை தஞ்சமடைகின்றனர். அவன் கன்னிகாவை மணந்து, மைத்துனனை மந்திரியாக்குகிறான். ஊர் சுற்றி வந்த துறவ ராஜேந்திரன் தற்செயலாய் மகேந்திரன் நாட்டிற்கு வருகிறான் பட்டத்தரசி கன்னிகா அண்ணன் உதவியால் துறவியை அரண்மனைக்கு அழைத்து உபசரிக்கிறாள். விதி தாண்டவமாடுகிறது. கன்னிகா மலைமேலிருந்து உருட்டப்படுகிறாள். மந்திரி பாதாளச் சிறையில் தள்ளப்படுகிறான். துறவி உயிரோடு கல்லறையில் புதைக்கப்படுகிறார். காரணம் என்ன? முடிவு என்ன? கர்ப்பிணி மிருணாளினியின் கதியென்ன என்பது மீதிக் கதை. நடிகர்கள்
தயாரிப்புபூனாவில் உள்ள பிரபாத் சுடூடியோவல் படமாக்கப்பட்டது.[3] இசைபடத்திற்கு சி. ஆர். சுப்புராமன் இசையமைத்திருந்தார். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia