ராஜ ஸ்ரீகாந்தன்
ராஜ ஸ்ரீகாந்தன் (ஜூன் 30, 1948 - ஏப்ரல் 20, 2004) வதிரி, யாழ்ப்பாணம்) எழுபதுகளின் ஆரம்பத்தில் விவேகி இதழில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார். இவருடைய சிறப்பான சிறுகதைகள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில ஆங்கிலம், உருசிய, உக்ரேனிய, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1987 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறைப் பாடநெறியைக் கற்றுத் தேர்ந்த இவர் சோவியத் நாடு, "சோஷலிசம் - தத்துவமும் நடைமுறையும்", "புதிய உலகம்" ஆகிய சஞ்சிகைகளிலும் சக்தி பத்திரிகையினதும் ஆசிரிய பீடங்களில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக 1997-2002 காலப்பகுதியில் பணியாற்றினார். ராஜ ஸ்ரீகாந்தன் மொழிபெயர்ப்புத் துறையிலும் தனது ஆற்றல்களை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார். சோவியத் இலக்கியகர்த்தாக்கள், கலீல் ஜிப்ரான் போன்றவர்களின் அற்புதமான ஆக்கங்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்துள்ளன. தனது சமகாலத்தில் வாழ்ந்த ஆங்கில இலக்கிய மேதை அழகு சுப்பிரமணியத்தின் இதுவரை வெளிவந்த அனைத்துச் சிறுகதைகளையும் (நீதிபதியின் மகன்), வெளிவராத 'மிஸ்ரர் மூன்' நாவலையும் தமிழுக்குத் தந்துள்ளார். "நீதிபதியின் மகன்", மற்றும் "காலச் சாளரம்" ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளைப் பெற்றன. வெளிவந்த நூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia