ராணித்தேனீ

ராணித்தேனீ
இயக்கம்ஜி. என். ரங்கநாதன்
தயாரிப்புஜி. என். ரங்கநாதன்
கதைபசுமணி (உரையாடல்)
திரைக்கதைஜி. என். ரங்கநாதன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. ஆர். இராமலிங்கம்
கலையகம்பரமேஸ்வரி என்டர்பிரைசஸ்
விநியோகம்பரமேஸ்வரி என்டர்பிரைசஸ்
வெளியீடு9 அக்டோபர் 1982[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராணித் தேனி (Rani Theni) என்பது 1982ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு நீண்ட விருந்தினர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பின்னணிப் பாடகர் தீபன் சக்ரவர்த்தி முதன்முதலில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். பெண் கதாபாத்திரங்களில் மகாலட்சுமி/ஸ்ரீ மற்றும் வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கமல்ஹாசன் பிரதான கதையுடன் எந்த தொடர்பும் இல்லாத நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு காட்சியில் மட்டுமே முக்கிய வில்லன் சிவச்சந்திரனுடன் உரையாடுகிறார், இவர் விளையாட்டுப் பிள்ளை மற்றும் காசநோவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்; இவரது பாத்திரம் கதாநாயகியால் கொல்லப்படுகிறது.

இந்த படம் சேலம் மற்றும் மாடர்ன் தியேட்டரில் படமாக்கப்பட்டது. மேலும், தொடருந்து பாதையில், காட்சி படமாக்கப்பட்ட போது கதாநாயகியினை தகுந்த நேரத்தில் கதாநாயகனால் காப்பாற்றப்பட்டார். கதாநாயகி அதிசயமாக உயிர் தப்பினார். பின்னர் இது குறித்து கேட்டதில் கதாநாயகி, தொடருந்து வருவது படப்பிடிப்பின் ஒரு பகுதி என்ற எண்ணத்தில் இருந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

நடிகர்கள்

இசை

இப்படப் பாடல்கள் இளையராஜாவின் இசையில் உருவாயின.[3]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 "என்ன சொல்லி நான் எழுத" பி. சுசீலா எஸ். என். ரவி
2 "சாமி சம்போ சரணம்" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன்
3 "ராமனுக்கே சீதை" எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி பஞ்சு அருணாசலம்
4 "கூடி வந்த மேகம்" மலேசியா வாசுதேவன் வைரமுத்து

குறிப்புகள்

  1. "ராணித்தேனீ" (in ta). தினத்தந்தி: p. 8. 9 October 1982. https://twitter.com/RajaparvaiB/status/1049928889751896064. 
  2. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. Retrieved 14 மே 2021.
  3. https://mossymart.com/product/rani-theni-tamil-film-ep-vinyl-record-by-ilayaraja/

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya