ராமசுப்ரமணியம்

ராம்
பிறப்புராமசுப்பிரமணியம்
11, அக்டோபர்
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ராம் சுப்பு
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2007 – நடப்பு

ராம சுப்ரமணியம் (எ) ராம் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்பு இயக்குநர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குநராக பணி செய்துள்ளார். அது மட்டும் இன்றி ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலானி போன்ற இந்தித் திரைப்பட இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராக பணி செய்துள்ளார். 2007ம் ஆண்டு வெளியான இவரின் முதல் திரைப்படமான கற்றது தமிழ் விமர்சன ரீதியில் பாராட்டைப் பெற்றாலும் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. அத்திரைப்படம் ஜீவாவிற்கும் அஞ்சலிக்கும் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

2013 இல் , இவர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் , இயக்கிய தங்க மீன்கள் என்ற படம் வெளியானது. இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களில் 'தங்க மீன்கள்' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்திற்கு மத்திய அரசு மூன்று "தேசிய விருதுகளை" வழங்கியுள்ளது.[1][2]

இயக்கிய படங்கள்

  1. கற்றது தமிழ் (2007)
  2. தங்க மீன்கள் (2013)
  3. தரமணி (2017)
  4. பேரன்பு (2019)

மேற்கோள்கள்

  1. "சர்வதேச திரைப்பட விழாவில் 'தங்க மீன்கள்'". தி இந்து. 15 அக்டோபர் 2013. Retrieved 15 அக்டோபர் 2013.
  2. "'தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்!".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya