ராமலீலா (திரைப்படம்)
ராமலீலா ( Ramaleela) என்பது 2017 ஆண்டைய இந்திய மலையாள அரசியல் திரைப்படமாகும். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. படத்தை அருண் கோபி இயக்கியுள்ளார். இப்படத்தில் திலீப், முகேஷ், கலாபவன் ஷாஜோன், பிரயாக மார்ட்டின் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். முலகுப்பதம் பிலிம்ஸ் தயாரிப்பில் டோமிச்சன் முலூபப்பாடுவால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலீப் பிரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டதால், படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.[3] படத்தை புறக்கணிக்குமாறு பலரால் அழைக்கப்பட்ட போதிலும், இந்த படம் 2017 செப்டம்பர் 28 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது.[1] கதைகம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) அக்கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். ராமண் உண்ணியின் தாய் ராகினி (ராதிகா சரத்குமார்) உட்பட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் வெளிப்படையான எதிர்ப்பையும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் வாய்ப்பைப் பறிகொடுத்தவர்களின் மறைமுக எதிர்ப்பையும் மீறி, அதிக ஆதரவாளர்களைப் பெற்று வெற்றிவாய்ப்பை நோக்கி நகர்கிறான். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலைப்பழி ராமன் மீது விழுகிறது. அதிலிருந்து ராமன் மீண்டானா, உண்மையான கொலையாளி யார், தேர்தல் முடிவு என்ன ஆகிய கேள்விகளுக்கான பதில்களுடன் முடிகிறது படம் தயாரிப்புபடமானது முலகுப்பதம் பிலிம்ஸ் தயாரிப்பில் டோமிச்சன் முலூபப்பாடுவால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.[4] இப்படம் ₹14 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். வெளியீடுராம்லீலா இந்தியாவில் 2017 செப்டம்பர் 28 அன்று வெளியிடப்பட்டது.[5] கேரளத்தில் 129 திரையரங்குகளில் வெளியானது.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia