ருசிகுல்ய ஆறு
![]() ருசிகுல்ய ஆறு (Rushikulya River) இந்தியாவின் மாநிலமான ஒடிசாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். கந்தமால் மற்றும் கஞ்சம் இவ்வாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளாகும். கந்தமால் மாவட்டத்தின் தாரிங்பாடி மலையில் 1000 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் ருசிகுல்யா ஆறு, சத்தர்பூர் எனுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ருசிகுல்யா ஆற்றின் முக்கிய துணை ஆறுகளாக பாகுவா ஆறு, தானெய் ஆறு மற்றும் பாத நதிகள் விளங்குகிறது. இதன் துணை ஆறுகளாக, தானெய் ஆறு, பாத நதி மற்றும் கோடஹதா ஆறுகள் விளங்குகிறது. ருசிகுல்யா ஆறு பாயுமிடங்கள்கஞ்சம் மாவட்டம் மற்றும் கந்தமால் மாவட்டத்தின் தாரிங்பாடி மலையில் உற்பத்தியாகும் ருசிகுல்யா ஆறு, கஞ்சம் மாவட்டம், சுரதா, தாராகோட்டே, ஆசிகா, பித்தலா, புருசோத்தம்பூர், தாரதாரிணி, பிரதாப்பூர், அல்லாடிகம், பிரம்மப்பூர் வழியாக பாய்ந்து, இறுதியில் சத்தர்பூர் எனுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ருசிகுல்யா ஆற்றின் நீளம் 165 கிலோ மீட்டர் ஆகும். இதன் நீர் பிடிப்பு பகுதி 7700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும்.2. இதன் முகத்துவாரங்களில் கடல் ஆமைகள் ஆண்டுதோறும் பருவ காலங்களில் முட்டையிடுகிறது.[1][2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia