ரூபா கங்குலி
ரூபா கங்குலி (பிறப்பு 25 நவம்பர் 1966) ஒரு இந்திய நடிகை, பின்னணிப் பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[5] பி.ஆர் சோப்ராவின் தொலைக்காட்சித் தொடரான மகாபாரதம் (1988) நாடகத்தில் திரௌபதியின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர் இவர். மர்னல் சென் , அபர்னா சென் , கௌதம் கோஸ் மற்றும் ரிருபருனோ கோஷ் போன்ற இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். இவர் முறையாக பயிற்சி பெற்ற பாடகர் மற்றும் நடனக்கலைஞர்.[6] தனது நடிப்புகாக தேசிய விருது மற்றும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] அக்டோபர் மாதம், 2015, மாநிலங்களவையின் உறுப்பினராக , இந்தியாக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் .[7] மேற்கு வங்கத்தில் பாஜக மகளிர் அணித்தலைவராக அவர் பணியாற்றினார்.[8] ஆரம்ப வாழ்க்கைரூபா இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே கல்யாணி என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஓர் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார். கொல்கத்தாவில் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மகளிர் கல்லூரியான ஜோகமயா தேவி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[9] தொழில்வங்காள நாடகமான முக்தபந்தனாவில் (1985) நடித்ததன் மூலம் பரவலாக அனைவராலும் அறிப்பட்டு புகழ்பெற்றார்.[10] 1986இல் கணதேவதா என்ற இந்தி நாடகத்தில் நடித்ததன் மூலம் தேசிய அளவில் அறிப்பட்டார். பின்னர் மகாபாரதம் என்ற நீண்ட கால இந்தி நாடகத்தில் திரௌபதியாக நடித்ததில் இந்திய அளவில் புகழ் பெற்றார்.[11] தனிப்பட்ட வாழ்க்கைகங்குலி 1992 முதல் 2006 வரை துர்போ முகர்ஜி என்பவருடன் திருமண வாழ்க்கையில் இருந்தார். அவர்கள் 1997 இல் ஒரு குழந்தை பெற்றனர்.[2] பின்னர் அவர்களுக்கிடையே மணமுறிவு ஏற்படும் வரை மும்பையில் வசித்துவந்தனர்.[12][13] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia