ரூபிக்கின் கனசதுரம்![]() ![]() ரூபிக்கின் கனசதுரம் (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) அங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் புதிர் ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. பொதுவாக இதில் வெள்ளை வண்ணத்தின் எதிர்ப்பக்கம் மஞ்சள் வன்ணமும், நீல வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பச்சை வண்ணமும், சிகப்பு வண்ணத்தின் எதிர்ப்பக்கம் ஆரஞ்சு வண்ணமும் அமைந்திருக்கும். ![]() தொடக்கத்தில் இது மேஜிக் கியூப் என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1980-ம் ஆண்டில் ‘ரூபிக்ஸ் கியூப்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும்.[1][2][3][4][5][6] ஹங்கேரியில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக ரூபிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்ஹதாய் என்பவர் 22.95 நொடிகளில் ரூபிக் கியூபுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தார். 2003 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் தொடர்ச்சியாக உலக ரூபிக் வாகையர் போட்டிகளை ரூபிக் நிறுவனம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திபாட் ஜாக்னாட் என்பவர் ரூபி புதிரைச் சரி செய்து புதிய உலகச் சாதனை செய்தார். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் (9.86 நொடிகள்) இந்தச் சாதனையைப் படைத்தார்.[7] 1980-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், Rubik's Revenge, ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே சட்டைப்பைக் குற்றி, பேராசிரியருடைய குற்றி என அறியப்பட்டன. பிரமிட் வடிவ பிரமிங்க்ஸ் ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன. "Rubik's Cube" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia