ரெங்கநாதன் விசைப்பலகை![]() ரெங்கநாதன் விசைப்பலகை அல்லது இலங்கை சீர்தர விசைப்பலகை என்பது இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகைத் தளக்கோலமாகும். இலங்கையில் அரச அலுவலகங்களிலும் ஏனைய பணிகளிலும் தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கு இந்த விசைப்பலகைத் தளக்கோலமே உத்தியோகபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் முதலில் தமிழ் 99 விசைப்பலகைத் தளக்கோலமே சீர்தரமாக்கப்பட்டிருந்தபோதிலும் இலங்கைக் கணினிப் பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் தமிழ் 99 கைவிடப்பட்டு ரெங்கநாதன் வடிவம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது சந்தையில் உள்ள மும்மொழி விசைப்பலகைகளில் இவ் இலங்கைச் சீர்தர விசைப்பலகைத் தளக்கோலமே பொறிக்கப்பட்டுள்ளது. வரலாறுஇலங்கையில் சீர்தரமாக தமிழ் 99 தளக்கோலமே இருந்துவந்தது. இத்தளக்கோலம் பொதுவாக பயன்படுத்தப்படாமலிருந்தமையும் இதனைப்பயின்று கொள்ள இலங்கைப்பயனர்கள் தயக்கம் காட்டுவதும் உணரப்பட்டு இது தொடர்பாக ஆராயவென 2006 ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் நாள் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் தமிழ் 99 இனைப் பயனர்கள் பரவலாக விரும்பவில்லை என்பதும் பெரும்பாலானோர் பாமினி வகை வடிவத்தையே கோரி நின்றதும் அறியப்பட்டது. இக்கூட்டத்தினைத் தொடர்ந்து இலங்கைத் தகவற் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இவ்விசைப்பலகை விவகாரத்துக்கென ஒரு பணிக்குழுவை நியமித்தது. 3 மாதகாலப் பணிகளுக்குப் பின்னர், 2007 ம் ஆண்டு சனவரி 24ம் நாள் அக்குழு புதிய விசைப்பலகைத் தளக்கோலத்தினைப் பரிந்துரைத்தது. ![]() பெயர்க் காரணம்ரெங்கநாதன் என்ற பெயர் இவ்விசைப்பலகைத் தளக்கோலத்துக்கு இடப்பட்டமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகச் சொல்லப்படவில்லை. பாமினி வகைத் தளக்கோலங்களைக் குறிக்க பேச்சளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சொல் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெமிங்டன் என்ற தமிழ் தட்டச்சுப்பொறியின் பெயர் மருவி ரெங்கநாதன் என்று ஆகியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. சுசாதா அவர்களின் உண்மைப் பெயர் ரெங்கநாதன் என்பதாகும் ரெங்கநாதன் தளக்கோலத்தின் சிறப்புகள்
பாமினிபாமினி தமிழ் எழுத்துருவானது ஹரன்கிறாப் எழுத்துரு வடிவமைப்பகத்தின் முதலாவது வெளியீடாகும். கனடாவில், ரொறொன்ரோவில் 1987இல் ஆரம்பிக்கப்பெற்று இன்றுவரை இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பல முன்மாதிரியான நவீன வடிவங்களில் எழுத்துருக்களை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன் 'ஈழம்' எழுத்துருவும் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் இலவசமாக வெளியிடப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இது தமிழ்த்தட்டச்சு வரிசையில் ஒழுங்கமைக்கப்பெற்றிருப்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும். பாமினி / தமிழ் தட்டச்சு வடிவத்திலிருந்தான வேறுபாடுகள்
விசைப்பலகை இயக்கிகள்இலங்கைச் சீர்தர விசைப்பலகை வடிவத்தில் தமிழை உள்ளிடுவதற்கான விசைப்பலகை இயக்கிகளும் ICTA நிறுவனத்தினரால் பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia