ரெனே டேக்கார்ட்ரெனே டேக்கார்ட் (அ) இரெனே தேக்கார்த்தே (René Descartes பிரெஞ்சு மொழி:[1] (மார்ச் 31, 1596 – பெப்ரவரி 11, 1650) [2] , ஒரு பிரான்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும்க கூட இருந்தார். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர் [3][4].இவரது பல தத்துவங்கள் இன்றைய காலகட்டத்திற்கும பொருந்துமாறு உள்ளது. பிரான்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் 20 வருடங்கள் (1629-49) தனது வாழ்க்கையை டச்சுக் குடியரசில் கழித்தார். அங்குள்ள ராணுவத்தில் சேந்து பணியாற்றினார். இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டசு கார்ட்டேசியசு (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்.[5] வாழ்க்கைஆரம்ப வாழ்க்கைஇவர் 1596 ஆம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் தேதி பிரான்சு நாட்டிலுள்ள லா ஹயே என் துரெய்ன் எனுமிடத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு வயது இருக்கும் போது அவரது தாய்க்கு மற்றொரு குழந்தைக்கான பிரசவத்தின் போது இறந்து விட்டார்.. இவரின் தந்தை ஜோவோச்சிம் ஒரு அரசியல்வாதி. ரேன்னிலுள்ள பிரெட்டனி சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் [6].ரெனே தனது பாட்டி மற்றும் பெரிய மாமா ஆகியோருடன் வசித்துவந்தார்.டேக்காரட்டின் குடும்பம் ரோமானிய கத்தோலிக்க மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் வசித்த போய்டோவ் பிராந்தியம் அவர்கள் மதத்திற்கு எதிர்கருத்துக் கொண்டோரின் (the Protestant Huguenots) கட்டுப்பாட்டில் இருந்தது[7] . கல்லூரி வாழ்க்கை1607 ஆம் ஆண்டில் அவரது உடல்நிலையின் காரணமாக லா-பிலெஞ்சிலுள்ள ஜேசூயிட் கல்லூரியில் நுழைந்தார் [8].அங்கே அவருக்கு கணிதம், இயற்பியல் மற்றும் கலிலியோவின் கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது [9]. 1614 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றதற்குப் பின் 1615 முதல் 1616 வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் படித்தார்.அங்கு இளங்கலை பட்டமும் பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார் அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்[10]. பின்னர் அங்கிருந்து பாரிசுக்கு இடம்பெயர்ந்தார். இவர் கல்லூரியில் கணிதம் பயின்றார். அதன்பாற் கொண்ட அன்பினால் இயற்பியலையும் பயின்றார். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.[4] இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பிரான்சில்1960 ல் டேக்காரட் டச்சு இராணுவத்திலிருந்து விலகினார் பின்னர் இத்தாலி நாட்டிலுள்ள பசிலிக்கா புனித இல்லத்திற்குச் சென்றார் பின்னர் பிரான்ஸ் செல்வதற்கு முன் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அடுத்த சில ஆண்டுகள் பாரிசில் காலத்தை கழித்தார்.அங்கு அவர் தனது முதல் கட்டுரையான மனதின் திசை விதிகள் ( Regulae ad Directionem Ingenii) என்பதை முறையாக உருவாக்கியிருந்தார் [11]. 1623 ல் லா ஹயே எனும் இடத்தை அடைந்தார். அவருடைய சொதடதுகடகலட அனைத்தையும் பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்திதிருந்தார். அம்முதலீடுகள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு வசதியான வருமானத்தைக் கொடுத்தன. 1627 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படையைச் சேர்ந்த கார்டினல் ரிசெல்யூ வின் கீழ் என்ற கடற்கறை துறைமுக நகரமான லா ரோசெல்லே வின் முற்றுகையில் டேக்கார்ட் கலந்துகொண்டார். கண்டுபிடிப்புகள் மற்றும் தத்துவங்கள்![]() இவரின் கண்டுபிடிப்பான கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system) கணிதத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) பெரிதும் பணியாற்றினார். இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. என்ன தான் ரேனே கணிதத்தில் நல்ல ஆர்வம் காட்டினாலும், அவர் மனதில் ஆன்மா தொடர்ப்பான பல சந்தேகங்கள் இருந்தன. மேலும் அவர் மதங்களை நம்பினாலும் அதனுள் காணப்படும் உண்மைகளை மட்டுமே ஆராயும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அக்காலத்தில் இருந்த மதச் சடங்குகளை தவிர்த்து அதன் வழி அறிவியல் ஆராய்ச்சியை நடத்தினார். இவர் மனித வாழ்வின் முடிவு என்ன? அதே போல் ஆரம்பம் என்ன? நம்மை கடவுள் தான் உருவாக்கினார் என்றால் அவருக்கு அந்த அளவிற்கு யார் சுதந்திரம் தந்தது என்ற கேள்விகளை தன்னுள் எழுப்பிக்கொண்டு அதற்கான விடைகளை தேட ஆரம்பித்தார். நாம் வாழ்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா? நீங்களும் நானும் பிறந்ததிற்கு ஏதேனும் காரணம் உண்டா? என அனைத்தையும் ஆராய்ந்தார். அப்போது தான் அவருக்கு பொறி தட்டியது இவற்றை பற்றி நாம் சிந்திக்கிறோம் ஆனால் நம் சிந்தனை பற்றி நாம் உணருவதில்லை என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. பின் தனது சிந்திக்கும் திறனை ஆராய்ந்தார். சிந்தனை என்ற ஒரு செயல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக இருப்பதை உணர்ந்தார். மேலும் அவையே மனிதனுக்கு இருக்கும் சக்திகளில் மிக வலிமை வாய்ந்தது எனவும் கருதினார். இறுதில் இவர் தனது ஆராச்சியின் முடிவை, "நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இருக்கிறேன்" (I think, therefore I am) என தனது குறிப்பேட்டில் எந்தவித சந்தேகமின்றி எழுதினார். மேலும் மதங்களில் காணப்படும் தூய ஆவி, மற்றும் சாத்தான்களை பற்றி ஆராய்ந்து அவைகள் மனிதர்களால் மனிதர்களுக்கு திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகள் மட்டுமே என்று கூறினார். இதனால் இவர் பல வழக்குகளை சந்தித்தார். ஆவிகளை ஆராயும் பணியில் இவர் தன்னை ஒரு ஆவி போல கற்பனை செய்து கொண்டார். பின்னர் அதன் உருவம், செயல் அனைத்தையும் கற்பனை செய்ய அவருக்கு மனம் தேவைப்பட்டது. அப்போது தான் அவருக்கு மனம் தொடர்பான சந்தேகம் எழுந்தது. மனம் என்றால் என்ன? அதுவும் கூட ஒரு வகையான சிந்தனையின் வெளிப்பாடுதான் என சிந்தித்தார். ஆகவே மனம் என்பது மூளை கொடுத்த சிந்தனையின் அதீத வெளிபாடு மட்டுமே என்று கூறினார். இந்த ஆராய்ச்சிக்காக இவர் தனது வீட்டை 17ம் நூற்றாண்டில் மாற்றியமைத்தார். இவரின் அறை ஒரு அடுப்பை போன்றது. அந்த அறையின் உட்புறத்தில் வெப்பம் வெளியிடுமாறு பலவகை முன் ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டது. ஆகையால் அக்காலத்தில் இவரை பலர் மனநோயாளி என்று நினைத்தனர். இவரின் வித்தியாசமான தேடுதலினால் இவரின் நண்பர் வட்டம் மிக குறைவாக காணப்பட்டது. இவர் ஒரு நாளின் பெரும் பகுதியை தனியே தன் அறையிலேயே கழிப்பார். தற்போது அவர் இருந்த அறை பிரான்சு அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவரின் இந்த தத்துவம் மத சடங்குகளில் பல முரண்பாடுகளை ஏற்படுத்தியதால், பல வழக்குகளை சந்தித்தார். பின் அனைவரின் முன்பு பொது மன்னிப்பு கேட்டதால் இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. ரேனே இயற்கையின் உண்மையான தத்துவங்களை ஆராய்கையில் பல மத ரீதியான கருத்துகள் உடைக்கப்பட்டன. அவரின் தத்துவார்த்தங்களின் வழி இவ்வாறே காணப்பட்டது[12]. இவர் நீண்ட நாட்கள் நிமோனியா என்ற நோயால் தாக்கப்பட்டிருந்தார். அதன் விளைவாக இறந்தார். மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளியிணைப்புகள்![]() விக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Descartes, René உள்ளது. ![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ரெனே டேக்கார்ட் ஊடகம்- காணொளி பொது
Stanford Encyclopedia of Philosophy |
Portal di Ensiklopedia Dunia