ரெம்டிசிவியர்
ரெம்டிசிவியர் என்பது கில்லியட் சைன்சஸ் என்கிற உயிரியல் மருந்துற்பத்தி நிறுவனத்தால் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்தாகும். இது ஊசி மூலம் சிரையில் (இரத்தநாளம்) செலுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக இதை பயன்படுத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன.[1][2][3] பயன்பாடு மற்றும் பக்கவிளைவுகள்துவக்கத்தில் கல்லீரல் அழற்சிக்கு பயன்படுத்தி வந்த ரெம்டிசிவியரை எபோலா வைரசுக்கு எதிராக பயன்படுத்தியதை அடுத்து நல்ல விளைவுகள் ஏற்பட்டதால், கொரோனா வைரசுக்கு எதிரான ஆற்றலும் ஆராயப்பட்டது.[4][5] முடிவில் இம்மருந்தை கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்துவதென உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்து.[6]அமெரிக்காவில் இம்மருந்து முதல் தர முக்கிய மருந்துகளின் பால் வைக்கப்பட்டுள்ளது.[7] குமட்டல், கல்லீரல் வீக்கம், மயக்கநிலை, குறைந்த இரத்த அழுத்தம் கொள்தல் மற்றும் வியர்த்தல் ஆகியவை இம்மருந்தின் பக்க விளைவுகளாய் அறியப்படுகின்றது.[8] அதிகபட்ச விளைவுகளாக மூச்சுத்திணறல், சிவப்பணு குறைதல், பொட்டாசியம் இழத்தல், உடல் நடுக்கம் மற்றும் குடல் அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia