இவர் ஆகஸ்ட் 2015இல் தேசிய மகளிர் ஆணையத்தில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அரியானாவில்பாஜக மாவட்டச் செயலாளராகவும், ஊடக பொறுப்பாளராகவும் இருந்தார். மேலும் அரியான அரசாங்கத்தில் மாவட்ட நுகர்வோர் மற்றும் நிவாரண மன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.
மகளிர் ஆணைய தலைவியாக
மகளிர் ஆணையத்தின் தலைவராக, சர்மா பெண்கள் மற்றும் பாஜக கட்சியின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் ஆதரவாளராக இருந்து வருகிறார். இவர் தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகத் தேவாலயங்களில் ஒப்புதல் வாக்குமூலத்தை ரத்து செய்யுமாறு கூறியதால் சர்ச்சைக்குரியவரானார்.[3]கேரள மாநில இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கை பதிவுச் செய்யக் காரணமாக இருந்தார். ஆனால் கேரள அரசு இது கட்சி தொடர்பான விடயம் என்பதால் கேரள மாநில மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியது.[4]பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைத் தேசிய மகளிர் ஆணையம் பதிவுசெய்ய வலியுறுத்தியது.
தேசிய மகளிர் ஆணையத் தலைவராகவும் உள்ள இவர் மனநல நிறுவனங்கள் மற்றும் [சிறைச்சாலை|சிறைச்சாலைகளைப்]] பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.[5] பெண்கள் கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என்று வாதிட்டார். பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களை இவர் விசாரிக்கிறார்.[6][7] வெளிநாடுகளில் வசிக்கும் கணவர்களால் கைவிடப்பட்ட இந்தியப் பெண்கள், குழந்தைக் காவல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் உள்ள பெண்கள் தொழிலாளர்கள் குறித்து கவலை தெரிவித்து அவர்கள் வாழ்வு ஏற்றப் பெறத் திட்டங்களை வகுத்துவருகிறார். அரசியலில் நுழையப் பெண்களை ஊக்கப்படுத்தும் இவர், முன்மொழியப்பட்ட ஒதுக்கீடு முறை குறித்து கவலையினை வெளிப்படுத்தியுள்ளார்.[8][9]
சர்மா நாடு முழுவதும் மகளிர் மக்கள் சன்வைஸ்/பொது விசாரணைகளுக்குத் தலைமை தாங்கினார். பல புகார்களைக் கேட்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.[10] காவல்துறையினருக்கான பயிற்சி மற்றும் உணர்திறன் திட்டங்களைச் சர்மா ஆதரிக்கிறார்.[11] மேலும் காவலருக்கு எதிரான புகார்களையும் விசாரிக்கிறார்.[12] தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் கலந்து கொள்ளாத காவல்துறையினருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரங்களையும் இவர் அரசிடம் கோரியுள்ளார்.[13] இராணுவ அதிகாரியை மணந்த இவர், இராணுவ வீரர்களின் துணைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளுக்கான குடும்ப நலத் திட்டங்களை ஊக்குவித்துள்ளார்.