ரேடியோ பெட்டி (திரைப்படம்)
வானொலிப் பெட்டி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரேடியோ பெட்டி, திரைப்படம் கொரியாவின் பிரபலமான பூசான் திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது. சரியாகக் காது கேட்காத ஒரு முதியவர் பழைய வானொலிப் பெட்டியை சத்தமாக வைத்துக் கேட்பதும், அதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுமே இந்தப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது. முதியவர்களின் உளவியல் ரீதியான பிரச்சினையை விளக்கும் திரைப்படமாகும். ரேடியோ பெட்டி திரைப்படம், பூசான் திரைப்பட விழாவில் முதன் முதலாகப் போட்டிக்கெனத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும்[1][2][3] ரேடியோ பெட்டி, திரைப்படம் 83 நிமிடங்கள் ஓடக் கூடியது. இப்படத்தில் லட்சுமணன், டி.வி.வி.ராமானுஜம், ஷோபனா மோகன், நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் போர்டு இசையமைத்துள்ளார். தயாரிப்பு நிர்வாகத்தை சுரேஷ் செல்வராஜன் கவனித்துள்ளார். இப்படத்தை எழுதி அரி விசுவநாத் எழுதி, இயக்கியுள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia