ரைட் லவ்லிவுட் விருது
![]() ![]() ரைட் லவ்லிவுட் விருது, (Right Livelihood Award) நோபல் பரிசுக்கு மாற்றாக கருதப்படுகிறது.[1][2][3][4][5][1]பன்னாட்டு விருதான ரைட் லவ்லிவுட் விருது, உலகம் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்களுக்கு நடைமுறை மற்றும் முன்மாதிரியான தீர்வுகளை மேற்கொள்பவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருது ஜோகப் வான் எக்ஸ்குல் எனும் ஜெர்மானிய சுவீடன் நாட்டவர் நிறுவிய அறக்கட்டளையால் 1980இல் முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சுவீடனில் வைத்து வழங்கப்படுகிறது.[6]சுற்றுச்சூழவியல் பாதுகாப்பு, மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பொது அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது இரண்டு இலட்சம் யூரோ மதிப்பு கொண்டது.[3] 2016இல் விருது பெற்றவர்கள்சிரியா நாட்டின் வைட் ஹெல்மட் தொண்டு நிறுவனம், துருக்கி நாட்டு ஊடுகவியலாளர் சூம் யூரியெட், எகிப்து நாட்டு பெண்கள் நல பிரசாரகர் மொசன் ஹசான் மற்றும் ருசியாவில் குடியேறிய அகதிகள் உரிமைகளுக்காகப் பணிபுரிந்த கனுஷ்கினா ஆகிய நால்வர்க்கு ரைட் லிவ்லி வுட் விருது வழங்கி பெருமைப் படுத்தப்பட்ட்டது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia