ரைவத மலை

ரைவதம் அல்லது ரைவத மலை (Raivataka), இந்திய இதிகாசம் மற்றும் புராணங்களில் குறிப்பிட்ட மலை ஆகும். மகாபாரத இதிகாசத்தின் ஆதி பருவம் 217வது அத்தியாயத்தில் சுலோகம் எண் 8ல் ரைவத மலையைக் குறித்துள்ளது.[1]மேலும் ஹரிவம்ச புராணத்தில் 2.55.111ல் ரைவத மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[2]மகாபாரத காவியத்தில் ரைவத மலை, ஆனர்த்த இராச்சியத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள்து. ஹரிவம்ச புராணத்தில் ரைவத நாட்டரசரின் இம்மலை விளையாட்டுத் தலமாகவும், (2.56.29); கடவுளர்களின் வாழிடமாகவும் (2.55.111) குறிப்பிட்டுள்ளது. துவாரகையின் யாதவ மக்கள் ரைவத மலையை வணங்கி பெரிய விழாவாக கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளது.

அமைவிடம்

ரைவத மலையை தற்போது குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு கிழக்கே உள்ள கிர்நார் மலையாக மக்கள் கூறுகிறார்கள். [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Adi Parva, chapter 217, verse 8
  2. Shanti Lal Nagar (editor) Harivamsa Purana Vol. 2 p.551
  3. Vittam Mani Puranic Encyclopaedia, p.626
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya