ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம்
![]() ரொறோன்ரோ மாவட்டப் பள்ளிச்சாலை வாரியம் (Toronto District School Board, TDSB; தமிழக வழக்கு: டோரொன்டோ மாவட்டப் பள்ளிக்கல்வி வாரியம், 1999க்கு முன்பாக ஆங்கில-மொழி பொது மாவட்டப் பள்ளி வாரியம் எண். 12[4]) கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில் ரொறன்ரோவிலுள்ள ஆங்கில மொழி சமயச் சார்பற்ற பொதுநிலைப் பள்ளிச்சாலை வாரியமாகும். இந்த வாரியத்தைத் தவிர இதே பகுதியில் சிறுபான்மையினருக்காக பொதுநிலை-சமயச் சார்பற்ற பிரான்சிய மொழி (கான்சில் இசுகூலேர் வயமாண்டே), பொதுநிலை-சமயச் சார்பு ஆங்கில மொழி (ரொறொன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பள்ளிச்சாலை வாரியம்), மற்றும் பொதுநிலை-சமயச் சார்பு பிரான்சிய மொழி (கான்சில் இசுகூலேர் தெ டிஸ்ட்ரிக்ட் கத்தோலிக்கு சென்டர்-சுத்) பள்ளிகளும் அவற்றின் வாரியங்களும் அரசுநிதி பெற்று நடத்தப்படுகின்றன. இதன் தலைமையிடம் நோர்த் யோர்க்கில் உள்ளது.[5] இந்த வாரியம் கனடாவின் மிகப் பெரிய பள்ளிச்சாலை வாரியமாகவும் வட அமெரிக்காவில் நான்காவது பெரிய பள்ளிச்சாலை வாரியமாகவும் விளங்குகின்றது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia