ரோசன் சில்வாஅதெக ரோசன் சிவன்கா சில்வா (Athege Roshen Shivanka Silva பிறப்பு நவம்பர் 17 ,1988) பொதுவாக ரோசன் சில்வா என அழைக்கப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும். கோல்ட்ஸ் துடுப்பாட்ட சங்கம் சார்பாக இவர் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகள்மார்ச் 2018 இல், அவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண துடுப்பாட்ட தொடரில் இவர் காலி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். இந்தத் தொடரில் கொழும்பு துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஆட்டப் பகுதியில் 231 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 535 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[1][2] மார்ச் 2019 இல், 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான தொடரில் இவர் கண்டி துடுப்பாட்ட அணி சார்பாக இவர் விளையாடினார்.[3] சர்வதேச போட்டிகள்ஜூலை 2016 இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வு துடுப்பாட்டத் தொடருக்கான இலங்கை அணியில் அவர் இடம் பெற்றார். ஆனால் அவர் விளையாடவில்லை.[4] செப்டம்பர் 2017 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் அணியில் அவர் இடம் பெற்றார். ஆனால் அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.[5] 2017ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்ட தொடரில் விளையாடியது. டிசம்பர் 2 2017 அன்று இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் இவர் ஆட்டமிழந்தார்.இருந்தபோதிலும் இரண்டாவது ஆட்ட பகுதியில் தனது முதல் 50 ஓட்டங்களை எடுத்தார். இருப்பினும், இந்தப் போட்டி சமனில் முடிந்தது. சில்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களுடன் கலத்தில் இருந்தார். வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் சில்வா தனது முதல் 100 ஓட்டங்களை அடித்தார்.[6] இதில்தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருடன் இணைந்து 100 ஓட்டங்களை எடுத்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி 713 ஓட்டங்கள் எடுப்பதற்கு உதவினார். இருப்பினும், இரு ஆட்டப் பகுதிகளிலும் வங்காளதேச மட்டையாளர் மோமினுல் ஹக் நூறு ஓட்டங்கள் அடித்த பின்னர் ஆட்டம் டிராவில் முடிந்தது.[7][8] இவர் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதன் மூலமாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்ட மைட்டாஇயாளர்களுக்கான தரவரிசையில் 29 இடங்கள் முன்னேறி 49 ஆவது இடம் பிடித்தார். இதன்மூலம் முதல் முறையாக 50 ஆவது இடத்திற்குள் இவர் முன்னேறினார்.[9] மே 2018 இல், 2018–19 சீசனுக்கு முன்னதாக இலங்கை துடுப்பாட்ட வாரியத்தினால் தேசிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட 33 துடுப்பாட்ட வீரர்களில் இஅவ்ரும் ஒருவராக இருந்தார்.[10][11] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia