றசல் ஆர்னோல்ட்
றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் (Russel Arnold, பிறப்பு: அக்டோபர் 25, 1973, கொழும்பு) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 180 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். விளையாட்டு வரலாறு1997ல் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாட ஆரம்பித்த இவர், அதே வருடத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார். தொடக்கத்தில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஆர்னோல்ட் பின்னர் 5ம், 6ம் துடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார். ஆட்டத்தின் மிகச்சிக்கலான நேரத்திலும் கலங்காமல் விளையாடக்கூடியவர் என்ற பெயரைக் கொண்டவர். ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியை பலமுறை தனது அமைதியான ஆட்டத்தினால் காப்பாற்றியிருக்கிறார். சிறந்த களத்தடுப்பாட்டக்காரரும், அவசியமான நேரங்களில் திறமையாக பந்து வீசக்கூடியவருமாவார். மெதடிஸ்த கிறிஸ்தவரான இவரும் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியில் தற்போதுள்ள இரண்டு தமிழ் வீரர்களாகும். புள்ளி விபரம்
2007 உலகக்கிண்ணத் தொடரில்தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி வீரர்கள் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து போய்விட, இவரும் திலகரட்ண டில்சானும் இணந்து 97 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் ஓட்டத்தொகையை ஓரளவு உயர்த்தினார்கள். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia