லக்கிசராய்
லக்கிசராய் (Lakhisarai), வட இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் மகத பிரதேசத்தில் அமைந்த லக்கிசராய் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு தென்கிழக்கே 132 கிலோ மீட்டர் தொலைவிலும்; முங்கேர் நகரத்திற்கு தென்மேற்கே 51 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.லக்கிசராய் நகர மக்கள் வட்டார வழக்கு மொழியான மகதி மொழியைப் பேசுகின்றனர். இந்நகரம் வழியாக கியுல் ஆறு பாய்கிறது.[3] மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 வார்டுகளும், 17,214 குடியிருப்புகளும் கொண்ட லக்கிசராய் நகரத்தின் மக்கள் தொகை 99,979 ஆகும். அதில் ஆண்கள் 52,66 மற்றும் 47,314 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.32% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.73 % மற்றும் 0.18 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 94.63%, இசுலாமியர் 5.14% மற்றும் பிற சமயத்தினர் 0.23% வீதம் உள்ளனர்.[4] போக்குவரத்துநெடுஞ்சாலைகள்வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானின் பெசாவர் நகரை தில்லி வழியாக இணைக்கும் பெரும் தலைநெடுஞ்சாலை லக்கிசராய் நகரம் வழியாகச் செல்கிறது. 4 நடைமேடைகள் கொண்ட லக்கிசராய் சந்திப்பு தொடருந்து நிலையம்[5]ஹவுரா, துர்காபூர், ஆசான்சோல், சமஸ்திபூர், பட்னா, தர்பங்கா, கயை, ஜனக்பூர் நகரங்களுடன் இணைக்கிறது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia