லக்கிம்பூர் மாவட்டம்
லக்கிம்பூர் மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் வடக்கு லக்கிம்பூர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2277 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1] இந்த மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. லட்சுமியின் பெயரால் லட்சுமிபூர் எனப் பெயர் பெற்றதாக சிலர் நம்புகின்றனர். பொருளாதாரம்இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தில் உழவுத் தொழில் பெரும்பங்கு கொண்டிருக்கிறது. அரிசி, தேயிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். சில சிறு தொழிற்சாலைகளும், நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 1,040,644 மக்கள் வசித்தனர்.[2] சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 457 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 965 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் அமைந்துள்ளது.[2] இங்கு வாழும் மக்களில் 78.39% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். .[2] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia