லக்சர் அருங்காட்சியகம்
லக்சர் அருங்காட்சியகம் (Luxor Museum), எகிப்து நாட்டின் மேல் எகிப்து பிரதேசத்தில் உள்ள லக்சர் நகரத்தில் அமைந்த எகிப்தியவியல், பண்டைய எகிப்திய வரலாறு மற்றும் பண்டைய எகிப்திய தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகம் ஆகும்.[1] நைல் நதி]]யின் கிழக்கு கரையில் அமைந்த லக்சர் எனப்படும் தீப[2] நகரம் தற்கால எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரத்திற்கு கிழக்கே 10.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எகிப்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லக்சர் அருங்காட்சியகம் இரண்டு அடுக்கு மாடிகளுடன் 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [3] தொல்பொருட்கள்லக்சர் அருங்காட்சியகத்தில் உள்ள வரலாற்று தொல்பொருட்களில் மிகவும் புழம்பெற்றது, புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் துட்டன்காமனின் கல்லறை எண் 62இல் 1989ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பார்வோன்களான முதலாம் அக்மோஸ் மற்றும் முதலாம் ராமேசசின் மம்மிகள், கல் சவப்பெட்டிகள், தங்க நகைகள், கல்லறை ஓவியங்கள், பண்டைய எகிப்திய மொழி எழுத்துகள் லக்சர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வோன் அக்கெனதென் கட்டிய கர்னாக் கோயில் சுவர்கள் இவ்வருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலைக் கடவுள் சோபெக் மற்றும் பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் இணைந்த சிற்பம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படக்காட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia