லாங்யியர்பியன் (Longyearbyen) என்பது நோர்வே நாட்டுக்குச் சொந்தமான சுவல்பார்டு தீவுக்கூட்டத்தின் நிருவாக மத்திய நிலையமும் பாரிய குடியேற்றமும் ஆகும். 2013 ஆம் ஆண்டில் இவ்விடத்தின் சனத்தொகை 2,075 ஆகும். லாங்யியர் கணவாயில்[1][2][3] இந்நகரம் அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் சமுதாய மன்றம் (Longyearbyen Community Council) ஆனது மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகளினைச் செய்து வருகின்றது. கல்வி, கலாச்சார வசதிகள், தீயணைப்பு துறை, சாலைகள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் பராமரிப்புப் பணிகளையும் இந்த மன்றமே மேற்கொண்டு வருகின்றது. லாங்யியர்பியன் நகரமே சிவல் பார்ட் ஆளுநரின் ஆசனாமாகும். உலகின் வடமுனையில் இருக்கும் நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புக்களைக் கொண்ட நகரம் இதுவேயாகும்.
இது 1926 ஆம் ஆண்டு வரை லாங்யியர்பியன் நகரம் என அழைக்கப்பட்டது. ஆர்க்டிக் நிலக்கரி நிறுவனத்தின் உரிமையாளரும் 1906 ஆம் ஆண்டில் நிலக்கரி அகழ்தல் தொழிற்பாடுகளில் ஈடுபட்டவருமான (John Munro Longyear) என்பவரின் பெயரிலிருந்தே இந்நகரிற்கு லாங்யியர்பியன் எனும் பெயர் சூட்டப்பட்டது. ஸ்டோர் நோர்சே எனும் நோர்வீஜிய நிலக்கரி அகழும் நிறுவனத்தால் தற்போது இங்கு நிலக்கரி அகழப்படுகின்றது. கிரிஜெக்ஸ்மரன் எனும் நாசிய இராணுவதால் இந்நகரம் 1943 ஆம் ஆண்டில் முற்றாக அழிக்கப்பட்டது. எனினும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் மீண்டும் இந்நகரம் கட்டப்பட்டது.
↑Capelotti, P. J. 2000. The Svalbard Archipelago: American Military and Political Geographies of Spitsbergen and Other Norwegian Polar Territories, 1941–1950. Jefferson, NC: McFarland & Company, p. 32.
↑Remmert, Hermann. 1980. Arctic Animal Ecology. Berlin: Springer, p. 16.
↑DePasqual, Seth. 2012. Winning Coal at 78° North: Mining, Contingency and the Chaîne Opératoire in Old Longyear City. In: Louwrens Hacquebord (ed.), Lashipa: History of Large Scale Resource Exploitation in Polar Areras, pp. 71–82. Groningen: University of Groningen, p. 75.