லாவோ எழுத்துமுறை

லாவோ எழுத்துமுறை என்பது லாவோ மொழியை எழுதப் பயன்படும் எழுத்துமுறை. இதைக் கொண்டு லாவோஸ் நாட்டு சிறுபான்மையினர் மொழிகளையும் எழுதுகின்றனர். இது 27 மெய்யெழுத்துகளையும் 33 உயிரெழுத்துகளையும் கொண்டுள்ளது. கூடுதலாக, 7 மெய் குறிகளும், 4 ஒலி அழுத்தக் குறிகளும் உண்டு. லாவோ எழுத்துமுறை, தாய் எழுத்துமுறையை ஒத்திருக்கும். மற்ற இந்திய மொழிகளைப் போலவே இதுவும் இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் முடிக்கப்படும். உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளுடன் இணையும் போது, மெய் எழுத்தின் மேல், கீழ், முன் அல்லது பின்னால் எழுதப்படும். லத்தீனைப் போன்று பெரிய, சிறிய எழுத்துகள் கிடையாது. பிற மொழிகளைப் போலவே, லாவோ மொழிக்கும் ரோமனாக்க வடிவம் உண்டு. கண் பார்வையற்றோர் படிப்பதற்காக, லாவோ மொழிக்கும் பிரெய்லி முறை உள்ளது.[1][2][3]

மெய் எழுத்துகள்

27 மெய் எழுத்துகளும், மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயர் அழுத்தம், மிதமான அழுத்தம், குறைந்த அழுத்தம் என மூன்று வகை ஒலிகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டன. இது தமிழில் உள்ள வல்லினம், மெல்லினம், இடையினம் போன்றது. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பெயர் உண்டு. அந்த பெயரிலேயே அந்த எழுத்தும் வரும். இதன் மூலம், அந்த எழுத்தை ஒலித்துப் பழகுவர்.

உயிர் எழுத்துகள்

உயிர் எழுத்துகள் சொல்லின் முதலில் வருவதில்லை. பிற உயிர்களுடன் இணைந்து கூட்டொலிகளை ஏற்படுத்தும்.

எண்கள்

இந்து அரேபிய எழுத்துகள் 0 1 2 3 4 5 6 7 8 9 10 20
லாவோ எண்கள் ໑໐ ໒໐

யூனிக்கோடு

ஒருங்குறி எனப்படும் யூனிக்கோடில் உலகின் பல மொழிகளின் எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. "லாவோ யூ.ஐ" என்ற பெயரில் லாவோ மொழி எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

லாவோ[1]
Unicode.org chart (PDF)
  0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
U+0E8x
U+0E9x
U+0EAx
U+0EBx
U+0ECx
U+0EDx
U+0EEx
U+0EFx
குறிப்பு
1.^ யூனிக்கோடு பதிப்பு 6.3-இன் படி

சான்றுகள்

  1. https://hal.science/hal-02358511/document
  2. Daniels, Peter T. & Bright, William. (Eds.). (1996). The World's Writing Systems (pp. 460–461). New York, NY: Oxford University Press.
  3. Rajan, Vinodh; Mitchell, Ben; Jansche, Martin; Brawer, Sascha. "Proposal to Encode Lao Characters for Pali" (PDF).

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya