லா யூனியன்
லா யூனியன் (La Union) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், இலோகொஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் சன் பெர்னான்டோ ஆகும். இம்மாகாணத்தில் 576 கிராமங்களும், 19 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் மானுவேல் "மனோலிங்" சி. ஒர்ட்டேகா (Manuel "Manoling" C. Ortega) ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக லா யூனியன் மாகாணத்தின் சனத்தொகை 786,653 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,497.7 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 69ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 36ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia