லிசா கெரார்டு
லிசா கெரார்டு (Lisa Germaine Gerrard, பிறப்பு ஏப்ரல் 12, 1961) ஆத்திரேலிய இசைக்கலைஞரும், பாடகரும் ஆவார்.தனது முந்தைய கூட்டாளி பிரென்டன் பெர்ரியுடன் உருவாக்கிய டெட் கேன் டான்சு என்ற இசைக்குழுவின் அங்கமாக பிரபலமானார். 2000ஆம் ஆண்டில் வெளியானத் திரைப்படம் கிளாடியேட்டரில் லிசா அன்சு சிம்மருடன் இணைந்து பாடிய பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும் அகாதமி விருதுக்கான பரிந்துரையும் பெற்றது. குரல் வளம்கெரார்டின் குரல் சுருதி குறைந்த கட்டையில் (contralto) E3-F5 வீச்சில் உள்ளது.[1](பொதுவாக பாடகர்கள் Dயில் பாடுவார்கள்).இவரது குரல் ஆழமாக, கனமாக தனிப்பட்டு உள்ளதாக வர்ணிக்கப்படுகிறது.[2][3][4] அதேநேரம் மேல் ஸ்தாயியில் பாடக்கூடியத் திறனையும் பெற்றுள்ளார். த ஹோஸ்ட் ஆஃப் செரஃபிம், எலஜி, ஸ்பேஸ் வீவர், கம் திஸ் வே மற்றும் ஒன் பெர்ஃபெக்ட் சன்ரைஸ் போன்ற பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.[5][6] இவர் தமது பாடல்களை அவரே உருவாக்கிய மொழிவடிவத்தில் பாடுகிறார். ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia