லிச்சவி நாடு (Licchavi Kingdom ) நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் கிபி 470 முதல் 750 முடிய இருந்த பண்டைய நாடாகும். இந்நாட்டை தற்கால இந்தியாவின் பிகார் மாநிலத்தின் மிதிலைப் பிரதேசத்தின் வைசாலி நகரத்தின் லிச்சாவி குலத்தினர் , காத்மாண்டு சமவெளியை கைப்பற்றி கிபி நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லிச்சாவி இராச்சியத்தை நிறுவினர்.[ 1]
அரசு
லிச்சாவிகள் தலைமை அமைச்சர், தலைமைப் படைத்தலைவர் மற்றும் நிலக்கிழார்கள் உதவியுடன் மகாராஜா பட்டத்துடன் லிச்சாவி நாட்டை ஆண்டனர்.
லிச்சாவிகளும் குப்தர்களும்
சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் லிச்சாவி இளவரசியும், தனது தாயுமான குமாரதேவி-மற்றும் முதலாம் சந்திரகுப்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்லது, கிபி 350 - 380
மகத நாட்டின் குப்தப் பேரரசர் முதலாம் சந்திரகுப்தர் , நேபாள லிச்சாவிகளின் இளவரசி குமாரதேவியை மணந்தவர்.
சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தில் ஒரு பக்கத்தில் இலக்குமியின் உருவமும், மறுபுறத்தில் முதலாம் சந்திரகுப்தர்-குமாரதேவியின் உருவமும் பதியப்பட்டிருக்கும்.[ 2] பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண்களில் , சமுத்திரகுப்தர் தன்னை லிச்சாவிகளின் பேரன் எனக் குறித்துள்ளார்.[ 3]
ஆட்சியாளர்கள்
நேபாள லிச்சாவி மன்னர் ஜிஷ்ணு குப்தரின் செப்பு நாணயம், (கிபி 622-633)
நேபாள லிச்சாவி மன்னர் ஜிஷ்ணு குப்தரின் செப்பு நாணயம், (கிபி 622-633)
லிச்சாவி நாட்டை ஆண்ட லிச்சாவி குல மன்னர்கள் பின்வருமாறு:[ 4]
185 முதலாம் ஜெயதேவ வர்மா
வசுராஜா என்ற வசுதத்த வர்மா
விஸ்வதேவன் கிபி 400
சங்கரதேவன் கிபி 425
தர்மதேவன் கிபி 450
முதலாம் மானதேவன் 464-505
மஹிதேவன் கிபி 505-506
வசந்ததேவன் 506-532
மனுதேவன்
வாமனதேவன் 538
ராமதேவன் 545
அமரதேவன்
அகாமதேவன்
பௌமகுப்தன் என்ற பூமிகுப்தர் 567 - 590
கங்கதேவன் 567-573
இரண்டாம் மானதேவன் 575/576
முதலாம் சிவதேவன 590-604
அம்சுவர்மன் 605-621
உதயதேவன் 624
துருவதேவன் 624-625
பீமார்ஜுனதேவன் 631-641
நரேந்திரதேவன் 643-679
இரண்டாம் சிவத்தேவன் 694-705
இரண்டாம் ஜெயதேவன் 713-733
இரண்டாம் சங்கரதேவன் 748-749
மூன்றாம் மானதேவன் 756 -
பலிராஜன் 826
பலதேவன் 847
நான்காம் மானதேவன் 877
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ https://books.google.co.uk/books?id=4ff2gk27p9oC&pg=PA437&dq=Licchavis+conquered+Nepal+bihar&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=Licchavis%20conquered%20Nepal%20bihar&f=false
↑ Raychaudhuri Hemchandra (1972), Political History of Ancient India , University of Calcutta, Calcutta, pp.468-9
↑ Lahiri, Bela (1974) Indigenous States of Northern India (circa 200 BC - 320 AD) , University of Calcutta, Calcutta, p.71,71n
↑ Tamot, Kashinath and Alsop, Ian. "A Kushan-period Sculpture, The Licchavi Kings", Asianart.com
வெளி இணைப்புகள்
Tamot, Kashinath and Alsop, Ian. "A Kushan-period Sculpture, The Licchavi Kings", Asianart.com
History of Nepal, Thamel.com
"Nepal: The Early Kingdom of the Licchavis, 400-750", Library of Congress Countryreports.org (September, 1991)
Vajrācārya, Gautamavajra, "Recently Discovered Inscriptions of Licchavi, Nepal", Kailash - Journal of Himalayan Studies, Volume 1, Number 2, 1973. (pp. 117-134) பரணிடப்பட்டது 2008-09-27 at the வந்தவழி இயந்திரம்